தமிழக முதல்வர் கருணாநிதியினால் அறிவிக்கப்பட்ட உலகத்தமிழ் செம்மொழி மாநாடு, அடுத்த வருடம் கோவையில் நடைபெறவுள்ள நிலையில், இம்மாநாட்டிற்கு தனது கடும் எதிர்ப்பினை தெரிவித்து, தமிழர் படைப்பாளிகள் கழகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
அவ் முழுமையான அறிக்கை கீழே தரப்படுகிறது.
முதலையும் மூர்க்கனும் கொண்டது விடா என்பார்கள். முதல்வர் கருணாநிதி என்ன பாடுபட்டும் உலகத்தமிழ் மாநாட்டை நடத்தியே தீருவது என்பதில் பிடிவாதமாக இருக்கிறார். மறுத்துரைப்போரை அவரது பாணியில் “சிறுநரிக் கும்பல்” “கும்பிட்டுக் கிடக்கும் விபீஷணக் கூட்டம்” “நெடுமரங்கள்” என்றெல்லாம் வசை பாடுகிறார். ஏதோ தமிழ் வளர்ப்பதை தானே ஒட்டு மொத்தமாகக் குத்தகைக்கு எடுத்துக் கொண்டிருப்பதாக கருணாநிதி நினைக்கிறார்.சிங்கள இராணுவம் மேற்கொண்ட இனவழிப்புப் போரில் ஒரு இலட்சம் தமிழர்கள் கொல்லப்பட்டார்கள். முள்ளிவாய்க்காலில் நடந்த இறுதிக்கட்டப் போரில் மட்டும் 20,000 மக்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். முள்ளிவாய்க்காலில் குருதி ஆறு பாய்ந்து கொண்டிருந்தபோது முதல்வர் கருணாநிதி தில்லியில் கூடாரமிட்டு மகனுக்கும் பேரனுக்கும் அமைச்சர் பதவிக்காகப் பேரம் பேசிய இரண்டகத்தை வரலாறு நிச்சயம் மன்னிக்காது.
இப்போதெல்லாம் முதல்வர் கருணாநிதி தன்னைக் கண்ணாடியில் பார்ப்பதில்லை போல் படுகிறது. பார்த்திருந்தால் யார் சிறுநரிக் கும்பல்,
தொடர்ந்து வாசிக்க..
No comments:
Post a Comment