ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் காலத்தின் கட்டாயத்தை கருத்திற்கொண்டு காத்திரமான முடிவெடுப்போம். கடந்த காலங்களைப் போல் தமிழ் மக்களை வாக்களிக்க வேண்டாம் என்று கூறுவதோ அல்லது தமிழ் மக்களின் வாக்குகளைச் சிதறடிக்கும் வகையில் சுயேச்சையாகப் போட்டியிடுவதோ புத்திசாலித்தனமானதல்ல என்று யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது. இது குறித்து மாணவர் ஒன்றியத்தின் செயலாளர் எஸ். சிறீரங்கன் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: மாறிவரும் உலகில் அரசியல், பொருளாதார அணுகுமுறை மாற்றங்கள் இன்று உலகமயமாதலின் விளைவாக அனைவரையும் அதன் தாக்கத்திற்கு உள்ளாக்குகின்றது.
மேலும்
No comments:
Post a Comment