"ஆனந்தி"
4தமிழ்மீடியா குழுமத்தின் மற்றுமொரு பரிணாமம்.
2008 ஜனவரி மாதம் இந்தியா, மலேசியா, இலங்கை, எனத் தேசங்கள் கடந்த தமிழ் நேசம் கொண்ட நண்பர்களின் எண்ணத்தில் கருவாகி, உலகத் தமிழர்களின் உறவுத் தளமாக உருப்பெற்றதுதான் 4தமிழ்மீடியா.
முத்தமிழின் சிறப்புக்களோடிணைந்து கணினித் தமிழ் எனும் நான்காம் தமிழால் உருப்பெறுவதால் நான்காம் தமிழ் ஊடகம் என்பதை சுட்டும் வகையிலும், சொல்வதற்கும், இணையப் பரம்பலுக்கு, ஏற்பாகவும், 4தமிழ்மீடியா எனப் பெயருடன் எழுந்த இக் குழுமம் படிப் படியாகத் செயற் திட்டங்களை வகுத்து, 2008 ஆவணிமாதம் (ஆகஸ்ட்) 14ந் திகதி, 4தமிழ்மீடியா தனது அதிகாரபூர்வமான சேவையை ஆரம்பித்தது. ஆரம்பித்த நாள் முதல் படிப்படியாக தன் நோக்கில் தடம் பதித்து வருகின்றது.
இணையத்தில் உள்ள புதிய தொழில் நுட்பங்களினடிப்படையில் விரிவான விரைவான நம்பிக்கையான செய்திகளைத் தொகுத்துத் தருவதுடன், பல்வேறு துறைசார் படைப்புக்களைத் தருவதும், புதிய தொழில்நுட்பம் சார்ந்த இணைய முயற்சிகளை மேற்கொள்வதும் , தொடரும் இந்த இணையப் பயணத்தில் எமது இலக்குகளாகும்.
4தமிழ்மீடியா இணையப்பணிகள் திட்டமிடும் போதே அதன் மற்றுமொரு செயல் திட்டமாக அச்சுப்பதிப்பாக சஞ்சிகை ஒன்றை கொண்டு வருவது குறித்தும் தீர்மானித்திருந்தோம். அதன்படி கடந்த மே மாதம் முதல் வெளிவருவதாக இருந்த சஞ்சிகை, ஈழத்தில் நிலவிய அசாதாரன நிலைகள் காரணமாக, இடைநிறுத்தப்பட்டிருந்தது.
தற்போது அம் முயற்சியின் தொடர்ச்சியாக, பெப்ரவரி 2010 இல் இருந்து “ஆனந்தி” எனும் மாதாந்த சஞ்சிகையை வெளியிடத்தொடங்கியுள்ளோம். இச்சஞ்சிகை வெளியீட்டின் முதற்கட்டமாக சுவிஸ் நாட்டிலும், தொடர்ந்து பல்வேறு நாடுகளிலும் வெளிவரும் வகையில் பரவலாக்கப்பட இருக்கிறது.
இணைய பயன்பாட்டிற்கு அப்பால் உள்ள தமிழ் மக்களிடத்தில் எமது கலை கலாச்சாரப் பரிமாற்றம், புலம் பெயர் சமூக பிரச்சினைகள் குறித்த ஆய்வுகள், இளைய தலைமுறையினரின் முயற்சிகளை ஊக்கப்படுத்தல், புதிய தொழில்நுட்பம் சார்ந்த விடயங்களையும், இணையம் பற்றிய பரிச்சயத்தினையும், தமிழில் அறியத்தருதல், குறைந்து போயிருக்க கூடிய வாசிப்பு பழக்கத்தினை ஊக்கப்படுத்தல் என்பன இச்சஞ்சிகை வெளியிடுவதன் பிரதான நோக்கங்கள் ஆகும்.
இச் சஞ்சிகைப் பணியில் உலகெங்குமிருந்து, இணைந்து பணியாற்ற விரும்பும் உள்ளங்கள் அனைவரையும் விரும்பி அழைக்கின்றோம். உங்கள் பணி, விளம்பர முகவராக, வினியோகிஸ்தராக, செய்தியாளராக, படைப்பாளியாக, எந்த வகையிலும் அமையலாம். உங்கள் உழைப்புக்கும், முயற்சிக்கும் உரிய பயனும், பணமும் கிடைக்கும்.
உங்கள் முழுமையான சுய விபரங்களுடன் விண்ணப்பிக்க வேண்டிய மின் அஞ்சல் முகவரி:
இனி; ஆனந்தியைக் காண,
No comments:
Post a Comment