புலத்துத் தமிழனின் இன்றைய முக்கிய சமுகப்பிரச்சினை உறவுச் சிக்கல். உறவு என்பது மனித வாழ்வின் ஆணிவேர். அன்பு வெளிப்பாட்டின் இதயம். பண்பான வாழ்வின் முதற்படிமுறை. இந்த உறவு என்பது இன்று புலத்தில் பணவழி இணைப்பு என்னும் எண்ணம் பலரிடை பரந்து விட்டதால் உறவு அன்பால் பண்பால் வளர்க்கப்படாது.
பணத்தால் பதவியால் புகழால் நிலைநிறுத்தப்படுகிற பரிதாப நிலை நடைமுறை வாழ்வாகிறது. பணத்திற்காக உழைக்க வேண்டும். பதவியைக் காப்பாற்றுவதற்காகப் படாதபாடுபட வேண்டும். பணத்தாலும் பதவியாலும் வரும் புகழைப் பேசி உறவுகளை உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்னும் எண்ணங்களில் இயங்கும் தமிழர்கள் பலர்.இந்த ஆக்கம் ஆனந்தி மாத சஞ்சிகைக்காக எழுதப்பட்டது. அதனை முழுமையாக வாசிக்க www.aananthi.com இல் பதிவு செய்து ஆன்லைனில் தொடருங்கள்.
No comments:
Post a Comment