Thursday, April 8, 2010

நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் - வடக்கு,கிழக்கு மாவட்டங்களில் தமிழரசு கட்சி முன்னிலையில்!

AddThis Social  Bookmark Button
இலங்கையில் நடைபெற்ற 7 வது நாடாளுமன்ற தேர்தலில் இதுவரை வெளியாகியுள்ள உத்தியோகப்பற்றற்ற தேர்தல் முடிவுகளின் படி, வடகிழக்கு மாவட்டங்களை இலங்கை தமிழரசு கட்சி கைப்பற்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. யாழ்ப்பாணம்,வன்னி, மட்டக்களப்பு மாவட்டங்களில் தமிழரசு கட்சி முதலாவது இடத்தில் உள்ளது. இக்கட்சிக்கு, யாழ்ப்பாணத்தில் 5 ஆசனங்களும், வன்னியில் 3 ஆசனங்களும், மட்டக்களப்பில் 3 ஆசனங்களும், திருகோணமலையில் 1 ஆசனமும் கிடைத்துள்ளதாக தெரியவந்துள்ளது.

திருகோணமலை மாவட்டத்தில், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி முன்னிலையில் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. காரணம் திருகோணமலை மாவட்ட தபால் மூல வாக்கெடுப்பு இறுதி முடிவுகளில் ஐ.ம.சு.மு 7487 வாக்குகள் பெற்று முன்னிலையில் இருந்தமை குறிப்பிடத்தக்கது.

நடந்து முடிந்த தேர்தலில் நாடுமுழுவதிலும், குறைந்தளவு வாக்குப்பதிவே இடம்பெற்றுள்ளதுடன், குறிப்ப்பாக, வடக்கு கிழக்கில் உள்ள ஐந்து தேர்தல் மாவட்டங்களில், யாழ். தேர்தல் மாவட்டத்தில் மிக மிக குறைந்தளவு (18.6%) வாக்குப்பதிவே இடம்பெற்றுள்ளது.

இது வரை வெளியாகியுள்ள (வடக்கு,கிழக்கு) மாவட்டங்களின் தேர்தல் முடிவுகள் - ஒரு பார்வை


read more...

No comments: