Wednesday, June 23, 2010

சூப்பர் 16 க்கு செல்லும் முதல் ஆசிய அணியானது தென்கொரியா - ஆர்ஜெண்டீனாவுக்கு நன்றி!

AddThis Social  Bookmark Button
நேற்றைய உலக கிண்ண காற்பந்து போட்டிகளில், நைஜீரியாவுடன் 2-2 என சமநிலைப்படுத்தியதன் மூலம்
16 அணிகள் மோதும் அடுத்த சுற்றுக்கு அதிர்ஷ்ட்டவசமாக தெரிவாகியது தென்கொரியா! இம்முறை, இரண்டாம் சுற்றுப்போட்டிகளில் நுழையும் முதல் ஆசிய அணி இது.! (சிலவேளை ஒரே ஒரு அணியாகவும் இருக்கலாம் - ஜப்பான் வெற்றிபெறாவிடின்) நேற்றைய போட்டிகளில் நைஜீரியா அணியினர் மிகச்சிறப்பாக விளையாடிய போதும், கோல் அடிக்க கிடைத்த இரு வாய்ப்பையும் மிகச்சிறப்பாக பயன்படுத்திக்கொண்டனர் கொரியர்கள்!

ஏற்கனவே குழு 'பீ'யில் ஆர்ஜெண்டீனா தான் விளையாடிய மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்று, 9 புள்ளிகளுடன் அடுத்த சுற்றுக்கு தெரிவாகியிருந்தது. தென்கொரியா, கிரீஸ் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் 3 புள்ளிகளை பெற்றிருந்தது.

இந்நிலையில் ஆர்ஜெண்டீனா, கிரீஸ் அணிகளுக்கு இடையில் இடம்பெற்ற போட்டியில் கிரீஸை இலகுவாக வீழ்த்தியது ஆர்ஜெண்டீனா! இதனால், நைஜீரியாவுடன் போட்டியை சமநிலைப்படுத்தினாலேயே மேலதிக 1 புள்ளியை பெற்று அடுத்த சுற்றுக்கு தெரிவாகும் வாய்ப்பை தென்கொரியா பெற்றுக்கொண்டது.

உண்மையில் தென்கொரியர்கள் ஆர்ஜெண்டீனா அணியினருக்கு தான் நன்றி சொல்ல வேண்டும்! நைஜீரியாவுடனான போட்டியில் தென்கொரியாவின் இரு கோல்களினையும் முறையே லீ ஜுங் சோ, பார்க் சூ யுங் அடித்தனர்.

உலக கிண்ண போட்டிகளில் இரண்டாவது சுற்றுக்கு தென்கொரியா தெரிவாகுவது இது இரண்டாவது முறை. நேற்றைய போட்டி மைதான அரங்கத்தை, தமது சிவப்பு ஆடைகளினால் அலங்கரித்தனர் கொரியர்கள்!

ஆனால் முதலாவது கோலினை நைஜீரியா போட்டதும், அரங்கமே அமைதி அடைந்தது. நீங்கள் தோற்றுவிடுவீர்கள் 'you will lose' என மறுபக்கம் இருந்து குரல் எழுந்ததும், கொரிய ரசிகர்களுக்கு மேலும் கவலை அளித்தது. ஆனால் தென்கொரிய நட்சத்திரம் லீ ஜிங் சூ தனது கோல் அடித்ததும், அரங்கமே மீண்டும் அதிர்வலைகளினால் read more..

No comments: