90 நிமிடங்கள் முடிவடைந்து மேலதிகமாக கொடுக்கப்பட்ட 3 நிமிடங்களுக்குள் கோல் அடித்து, அடுத்த சுற்றுக்கு தெரிவாகும் வாய்ப்பை பெற்றுள்ளது அமெரிக்கா! லாண்டன் டோன்வொன், முதலாவது மேலதிக நிமிடத்தில், அடித்த கோல் 1-0 என அல்ஜீரியாவை வீழ்த்த காரணமானது!
வேகமாக அடிக்கப்பட்ட பந்தை அல்ஜீரியா கோல் கீப்பர், இலாவகமாக வீழ்ந்து பிடித்தார். ஆனால் கையிலிருந்து நழுவியது பந்து. ஒரு செக்கன் தான், மின்னல் வேகத்தில் வந்து, தவறி விழுந்த பந்தை கோலாக மாற்றிவிட்டு, கோர்னர் அருகே இருக்கும் கொடிக்கு முன்னால் விறுக்கென வீழ்ந்து புரள, ஒட்டுமொத்த அமெரிக்க அணியினருமே அவர் மீது வீழ்ந்து தமது சந்தோஷத்தை வெளிப்படுத்தினர்.
read more...
No comments:
Post a Comment