
FIFA 2010 உலக கிண்ண காற்பந்து போட்டிகளில் நேற்றைய சனிக்கிழமை (ஜூன் 19) ஆட்டத்தில், ஒட்டுமொத்த ஆபிரிக்க கண்டத்தின் ஆதரவு கரகோசத்திலும், போராடி தோற்றுப்போனது கெமரூண் அணி! டென்மார்குடனான இப்போட்டியில் 2-1 என்ற நிலையில் வீழ்ந்தது கெமரூன்! இம்முறை போட்டிகளை நடத்தும் தென்னாபிரிக்காவும், அடுத்த சுற்றுக்கு தெரிவாகாது என முடிவாகிப்போக,
கானா மட்டுமே குழு B யில் முன்னிலை வகித்து அடுத்த சுற்றுக்கு தெரிவாகும் ஆபிரிக்க நாடாக இருக்கிறது.கானாவுடன் சேர்ந்து இருண்ட கண்டத்துக்கு ஒளிகொடுக்கும் என ரசிகர்களினால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது கெமரூன் தான்! நேற்றைய போட்டியில் வெற்றிபெற்றே ஆக வேண்டும் என்ற கட்டாய நிலையில், முதல் போட்டியில் ஜப்பானுடன் தோற்றுப்போன அணியில்லாது, உற்சாகமாக புதிய களமுனை அமைத்துக்கொண்டு களமிறங்கியது கெமரூன்.
read more...
No comments:
Post a Comment