உலக கிண்ண காற்பந்து போட்டிகளிலிருந்து அரசியலுக்கும் அதிரடியாக கால் வைத்துள்ளது அக்டோபஸ்! சும்மா இல்லைங்க! 8 கால்கள்! ஜேர்மனி புகழ் பால் அக்டோபஸ் கணித்த உலக கிண்ண காற்பந்து போட்டிகளின் முடிவுகள் யாவும் அப்படியே நடந்துவிட்டதால், பால் ஆக்டோபஸ் மூலம் பல்வேறு புதிய கணிப்புக்களை நடத்த அழுத்தங்கள் வந்தன.
இது சிக்கலை அதிகரிக்கும் என ஊகித்த மியூசியக்குழுவினர், பால் அக்டோபஸ் இனிமேல் எந்த கணிப்புக்களையும், மேற்கொள்ளாது. அதற்கு ஓய்வு அளிக்க போவதாக தெரிவித்துவிட்டனர். இந்த நிலையில் அஸ்திரேலியாவில் அடுத்த மாதம் 21 ம் திகதி நடைபெறும் பாராளுமன்ற தேர்தலில் யார் பிரதமராக வருவார் என்பதை தீர்மானிக்க அக்டோபஸிடம் ஆரூடம் கேட்கப்பட்டது.
ஆனால் கேட்கப்பட்டது ஜேர்மனியில் உள்ள போல் அக்டோபஸிடம் அல்ல. அ ஸ்திரேலிய அருங்காட்சியத்தில் காலநிலை தட்ப ஆராய்ச்சிக்காக வளர்க்கப்படும் 'கசண்டரா' எனும் அக்டோபஸிடம்!

தொடர்ந்து வாசிக்க...

No comments:
Post a Comment