Sunday, July 25, 2010

அமெரிக்க - தென்கொரிய கூட்டு இராணுவ பயிற்சிக்கு வடகொரியா கடும் எதிர்ப்பு - போர் மூளும் அபாயம்!

AddThis Social  Bookmark Button

தென்கொரியாவுடன் இணைந்து அமெரிக்கா மேற்கொள்ளத் தொடங்கியிருக்கும் கூட்டு இராணுவ ஒத்திகை நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்பு வெளியிட்டுள்ள வடகொரியா, போர் மூளும் சூழலுக்கு தம்மை கொண்டு செல்லும் நடவடிக்கை இது என விமர்சித்துள்ளது.

அண்மையில் வடகொரியா அருகே நிறுத்தப்பட்ட தென்கொரிய போர்க்கப்பல், வடகொரிய நீர்மூழ்கி கப்பலின் தாக்குதலில் வெடித்து சிதறியது. கடற்படை வீரர்கள் 46 பேரிதில் பலியானார்கள். இச்சம்பவத்துக்கு அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் கண்டனம் தெரிவித்தன. ஐ.நா சபையும் கண்டித்து தீர்மானம் நிறைவேற்றியது.

இதை தொடர்ந்து வடகொரியாவை அச்சுறுத்தும் நோக்கத்துடன், தென்கொரியாவும் அமெரிக்காவும் சேர்ந்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் கூட்டு இராணுவ ஒத்திகை நடவடிக்கையை ஆரம்பித்துள்ளன. பயிற்சியில் ஈடுபடுவதற்காக அமெரிக்காவின் ஜார்ஜ் வாஷிங்டன் கப்பல் தென்கொரியாவை வந்தடைந்துள்ளது.

அமெரிகக் கடற்படையின் போர் விமானங்களும், தென்கொரிய கடற்படையின் ஆயுத விமானங்களும் இணைந்து முதற்கட்ட பயிற்சிகளை, தென்

தொடர்ந்து வாசிக்க...

No comments: