Saturday, July 24, 2010

உலக வரலாற்றில் இடம்பெறப்போகும் இன்றைய நாள் *ஜூலை 24 இல் நீங்கள் வாழ்கிறீர்கள்!

கண் முன்னே உலக வரலாற்றில் இடம்பெறப்போகும் இன்றைய நாளில் வாழ்ந்ததற்கு அடையாளமாக நீங்களும் இருக்கப்போகிறீர்களா? உலகின் குறிப்பிட்ட ஒரு நாளான இன்று 24 மணி நேரத்திற்குள் இடம்பெறும் 6 பில்லியன் நிகழ்தகவுகளுக்குள் உங்களையும் நீங்கள் பதிவு செய்து கொள்ளப்போகிறீர்களா?

அதுமட்டுமல்லாமல் சுமார் 50 வருடங்களுக்கு பிறகு, இன்றைய நாள் (24ம் திகதி, ஜூலை மாதம், 2010 ம் ஆண்டு) உலகம் எப்படி இயங்கிக்கொண்டு இருந்தது என பார்வையிடப்போகிறீர்களா? இதோ உங்களுக்கான ஒரு அதிர்ஷ்ட்டவசமான வாய்ப்பு இது!

24.07.2010 (சனிக்கிழமை) இன்றைய நாளின் 24 மணி நேரத்திற்குள் உலகில் என்ன நடைபெறுகிறது என்பதை ஆய்வுரீதியான 'டாக்குமெண்டரி' திரைப்படமாக எடுக்கும் முயற்சியில் ஆஷ்கார் இயக்குனர் (Kevin Mcdonald) கெவின் மெக்டொனல்ட் இறங்கியுள்ளார்!

இந்த படத்தை உருவாக்கப்போகிறவர் அவர் அல்ல! நீங்கள் தான்!

நீங்கள் செய்ய வேண்டியது இது தான்! இன்றைய உயிர்த்துடிப்பான நாளின் உயிரணுக்களில் நீங்களும் ஒருவர் என்ற வகையில்,
இன்றைய தினசரி வாழ்வில் நீங்கள் பார்வையிடும் ஏதாவது ஒரு நிகழ்வை ஒரு கமெராவில் படம்பிடித்து உங்களது 'YOUTUBE' User ஊடாக LIFE IN DAY ற்கு அனுப்புங்கள்! (இன்றைய நாளையே பதிவு செய்ய வேண்டும்) ஜூலை 30 ம் திகதிக்குள் அனுப்ப வேண்டும்

சூரியன் மறையும் காட்சி, உங்களது நண்பனுடனான அரட்டை, இரவு விருந்துபசாரம் இப்படி எதையும் நீங்கள் பதிவு செய்து அனுப்பலாம்! தெளிவோ, தெளிவின்மையோ, அந்த வீடியோ 2 GB Capacity மேல் இருந்தாலும் பிரச்சினையில்லை! சாதாரண தொலைபேசியில் பதிவாக்குவது என்றாலும் பிரச்சினை இல்லை! ஆனால் இது முழுக்க முழுக்க உங்களது சொந்த முயற்சியாக இருக்க வேண்டும்! உயிர்த்துடிப்பானதாக எதையாவது பதிவு செய்து அனுப்ப முயற்சியுங்கள்!

நீங்கள் மேலதிக ஒரு வீடியோவையும் பதிவு செய்து அனுப்பலாம்! அதற்கு கெவின் மெக்டானல்ட் கேட்பது நான்கு கேள்வியே!

தொடர்ந்து வாசிக்க...

No comments: