Thursday, July 15, 2010

தோல்விக்கு காரணம் நடுவர் தான்! - திட்டித்தீர்க்கும் நெதர்லாந்து!

AddThis Social  Bookmark Button
இங்கிலாந்து நடுவர் ஹார்வார்ட் வெப்பின், ஒரு பக்க சார்பு தீர்ப்புக்களினாலேயே தாம் இறுதிப்போட்டியில் தோற்றுவிட்டதாக நெதர்லாந்து விசனம் தெரிவித்துள்ளது. தென்னாபிரிக்காவில் நடைபெற்று முடிந்த உலக கிண்ண காற்பந்து தொடரின் இறுதி போட்டியில், ஸ்பெயின் நெதர்லாந்தை வீழ்த்தி சாம்பியன் ஆனது. ஆனால் இரு அணிகளும் தமது முரட்டுத்தனமான ஆட்டத்தை வெளிப்படுத்தின. இதனால் 14 மஞ்சள் நிற அட்டைகள் காண்பிக்கப்பட்டது.

இதில் அதிகம் பாதிக்கப்பட்டது தமது அணியே என நெதர்லாந்து தெரிவித்துள்ளது. போட்டி முடிவடையும் நேரத்தில், அவ் அணியின் வீரர் ஹெடிங்கா, சிவப்பு அட்டை காண்பிக்கப்பட்டு வெளியேற்றப்பட்டமை அதிர்ச்சியை ஏற்படுத்தியதெனவும், இப்படி தங்களுக்கு எதிராக மட்டும் தண்டனை வழங்கிய நடுவர் ஹவார்ட், ஸ்பெயின் வீரர்கள் செய்த தவறுகளை கண்டுகொள்ளவே இல்லை எனவும் நெதர்லாந்தின் நட்சத்திர வீரர் ரொபேர்ன் தெரிவித்துள்ளார்.

read more..

No comments: