Monday, March 30, 2009

ரியாலிட்டி ஷோக்களின் உண்மை நிலை என்ன?

குறிப்பிட்ட காலங்களுக்குள் தமிழ்த் தொலைக்காட்சிகளை ஆக்கிரமித்திருக்கும் , நிகழ்ச்சிதான் ' ரியாலிட்டி ஷோ '. எல்லாத் தொலைக்காட்சிகளும், ஏதோ ஒரு பெயரில், ஏறக்குறைய ஒரே மாதிரியான ரியாலிட்டி ஷோக்கள் பலவற்றை நடத்திக்கொண்டிருக்கின்றன.

இந்நிகழ்ச்சிகளின் பெயர்களும், நடத்தும் நிறுவனங்களும் மட்டுமே வேறாக இருக்கும். மற்றும் படி நிகழ்ச்சி உள்ளடக்கத்தில் இருந்து, பங்குகொள்ளும் கலைஞர்கள் வரை பலவற்றில் மாற்றம் ஏதுமிருப்பதில்லை. இதற்கு வரும் பிரபலங்களிலும் பெரிதும் மாற்றம் இருப்பதில்லை.
அதைவிடக் கொடுமை என்னன்னா, அவங்க அந்நிகழ்ச்சியைப் பாராட்டிப்பேசும் வசனங்கள் கூட பெரிதாக மாறியிருப்பதில்லை. ' இந்த மாதிரி நிகழ்ச்சி வேறெதுவுமெ இல்லையென்பார்'.. அதையே இரு வாரங்களுக்கு முன் மற்றொரு தொலைக்காட்சியின் நிகழ்ச்சியிலும் சொல்லி இருப்பார்.

' என்ன கொடுமை சரவணா..' என எண்ணுகின்றீர்களா?. அல்லது இதன் சாதக பாதகங்கள் பற்றி யோசித்திருக்கின்றீர்களா? எதுவாயினும் உங்கள் கருத்துக்களை இங்கே பகிருங்கள். இருவாரங்களின் நிறைவில் இங்கு பகிரப்படும் கருத்துக்களினையும் உள்ளடக்கி, உரியவர்கள் சிலரது கருத்துக்களையும் இணைத்து, உண்மைநிலை காண்போம்.

எங்கே உங்கள் கருத்துக்களை எழுதுங்கள் பார்ப்போம்!

No comments: