Tuesday, March 31, 2009

சீமானைச் சிறை வைத்தது என்ன நியாயம் ? - பாவாணன்


தமிழகத் தேர்தலுக்கான தொகுதிப் பங்கீடுகளும், கூட்டணி முடிவுகளும் ஓரளவுக்குத் தீர்மாகிவிட்டது. வாக்காளர்கள் நியமனங்களும், பிரச்சாரங்களும் இன்னமும் தொடங்கப்பட்டாத நிலையிலேயே, திமுக, காங்கிரஸ் கூட்டணிக்கான எதிர்பிரச்சாரம் வலுத்து வருவதாகத் தமிழகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

திமுகவினதும், காங்கிரசினதும், ஆதரவாளர்களாக இருந்தவர்களே இத்தகைய எதிர் பிரச்சாரத்தில் குதித்திருப்பது இந்தக் கூட்டணியின் தேர்தல் வெற்றிப்பிரச்சாரத்துக்குச் சற்றுச் சவாலாகவே தென்படுகிறது. ஈழத்தமிழர் பிரச்சனையில் திமுக, காங்கிரஸ் கட்சிகள் ஆடிய நாடகமே இந்த அதிருப்பதி நிலை தோன்றக் காரணமெனச் சொல்லப்படுகிறது.

ஈழத்தமிழர் போராட்டதை ஆதரித்துப் பேசிய, தமிழுணர்வாளர், இயக்குனர் சீமானை, கொளத்தூர் மணி, ஆகியோரைக் கைது செய்து சிறையிலடைத்துள்ளது தமிழக அரசு. இந்நிலையில், திமுகத் தலைவர் கருணாநிதியை நேசித்த பாவாணன், காங்கிரசிலிருந்து விலகிய தமிழருவி மணியன் ஆகியோர், இக்கட்சிகளின் நடவடிக்கைகளை, மேடைகளில் மிக்கக்கடுமையாக விமர்சித்து வருகின்றார்கள். இவர்களது இந்த விமர்சன உரைகளுக்குப் பலத்த ஆதரவும் கிடைக்கின்றது.

அன்மையில் நடந்த நிகழ்வொன்றில் புதுக் கோட்டைப் பாவாணன் திமுக, காங்கிரஸ் கட்சிகளையும் அதன் தலைவர்களையும் கடுமையாக விமர்சித்துப்பேசினார். சீமானைச் சிறையிலடைத்தது என்ன நியாயம் எனஆவேசமாக குரல்கொடுத்தார்.

அந்த உரையை முழுமையாகக் கேட்க:

உங்கள் பதிவுகளை இங்கே இணைத்து விட்டீர்களா?

No comments: