சென்னையில் ஈழத்தமிழர்களுக்காகத் தீக்குளித்து மரணமான முத்துக்குமாரின் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்ட இடத்தில், தமிழகத்தைச் சேர்ந்த நூறு பெண்கள் முன்னெடுத்திருக்கும் சாகும்வரையிலான உண்ணாவிரதப் போராட்டம் இன்று மூன்றா வது நாளாகவும் தொடர்கிறது.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த, வெவ்வேறு அமைப்புகளிலிருந்து வந்த பெண்கள்,பேராசிரியை சரஸ்வதி தலைமையில் போரினால் ஈழத்தில் பாதிக்கப்பட்டுள்ள பெண்களையும் குழந்தைகளையும் மக்களையும் பாதுகாக்க கோரி, இந்தச் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடர்கின்றனர்.மேலும் செய்திகளுக்கு
No comments:
Post a Comment