புதினம் இணையத்தளத்தின் வன்னிச் செய்தியாளர் இன்று காலையில் வழங்கிய செய்திக்குறிப்பு, புதினத்தால் வெளியிடப்படடுள்ளது. அதிலே தமிழின அழிப்பிற்கான இறுதிக்கட்ட நடவடிக்கையை சிறிலங்கா இராணுவம் ஆரம்பித்து விட்டதாக தெரிவித்துள்ளார். இது குறித்த புதினத்தின் செய்தியை அப்படியே தருகின்றோம்.
கடந்த இரண்டரை வருடங்களாக - உலகப் பெரும் சக்திகள் சிலவற்றின் துணையுடன் - சிறிலங்கா நடத்திவரும் தமிழின அழிப்பு போர் அதன் இறுதிக் கட்டத்தை இன்று திங்கட்கிழமை காலை அடைந்திருப்பதாக - தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இன்னமும் மிஞ்சியிருக்கும் முள்ளிவாய்க்கால் கிராமத்தில் இருந்து 'புதினம்' செய்தியாளர் செய்மதி தொலைபேசி மூலம் சற்று முன்னர் தெரிவித்துள்ளார். இதுவே தான் மேற்கொள்ளும் இறுதி தொலைபேசி அழைப்பாக இருக்கக்கூடும் எனவும், இனி என்ன நடக்குமோ தெரியாது எனவும் குறிப்பிட்டுவிட்டு, தனது கடைசிச் செய்திக் குறிப்பு இது எனக் குறிப்பிட்ட 'புதினம்' செய்தியாளர் சொன்னவை அவரது வார்த்தைகளிலேயே:
தொடர்ந்து வாசிக்க
No comments:
Post a Comment