Tuesday, May 5, 2009
புத்தர் போல் ஜெயலலிதாவும் திடீர் ஞானம் பெற்றாரா..? - கனிமொழி
மக்களவைத் தேர்தலுக்கான பிரச்சார மேடைகளில், தமது கட்சிகள் ஆட்சிக்கு வந்தால் மக்களுக்கு ஆற்றவிருக்கும் செயற்திட்டங்கள் பற்றிப் பிரச்சாரம் செய்வதற்காக நடைபெறும் பிரச்சார மேடைகள், ஒரு கட்டத்தின் பின், எதிர் போட்டியாளரைத் தாக்கிப் பேசுவதே பிரச்சாரம் என்றாகிவிட்டது. இதற்கு விதிவிலக்காக ஒருசில பேச்சாளர்கள் இருந்தார்கள். அவர்களில் திமுக நாடாளுமன்ற உறுப்பினரும், கலைஞரின் மகளுமாகிய கனிமொழியும் ஒருவர். ஆனால் தற்போது அவரும் எதிர்த் தாக்குதல் பிரச்சாரத்தில் குதித்துவிட்டது போல் தெரிகிறது. திருவொற்றியூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றுகையில், போதிமரத்து புத்தர்போல் ஈழத்தமிழர் பிரச்சினையில் ஜெயலலிதாவுக்கு திடீர் ஞானோதயம் வந்துள்ளமை ஆச்சரியமானது. ஆனால் அது வெறும் தேர்தற்கால அக்கறைதான். தேர்தல் முடிந்ததும் ஈழத்தமிழர் பிரச்சினையை அவர் மறந்து விடுவார் எனக் குறிப்பிட்டார்.
மேலும் வாசிக்க
Labels:
4tamilmedia,
இந்தியச் செய்தி,
செய்தி,
தமிழகத் தேர்தல்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment