Monday, June 1, 2009

அவுஸ்திரேலியாவில் நடத்திய பேரணியில் 18 இந்திய இளைஞர்கள் கைது


18 இந்திய இளைஞர்கள் இனவெறிக்கெதிராக நேற்று நடத்திய அமைதிப் பேரணியில் கைது செய்யப்பட்டுத் தடுத்து வைக்கப் பட்டுள்ளனர். கிட்டத்தட்ட 5000 பேர் கலந்து கொண்ட இப்பேரணியில் இந்திய மாணவர் அமைப்புக்களான FISA மற்றும் NUS ஆகியவற்றைத் தவிர சம்பந்தமில்லாத பலரும் குழப்பம் விளைவிப்பதற்காகவே கலந்து கொண்டிருந்ததுடன் அவர்கள் குடித்திருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது. மேலும் இம்மாணவர்கள் தங்களுக்கு நீதி வேண்டும் என்றவாறும் இனவெறி ஒழிக்கப்படவேண்டும் என்றவாறும் பல்வேறு பதாதைகளுடன் மெல்பேர்னின் முக்கிய வீதிகளினூடு கோசமிட்டவாறு சென்றுள்ளதுடன் வாகனப் போக்குவரத்துக்கும் இடைஞ்சல் விளைவித்ததாகத் தெரிகின்றது.

மேலும் வாசிக்க...

No comments: