மனித உரிமைகள் தொடர்பான ஐ.நாவினதும், மனித உரிமை கண்காணிப்பகத்தினதும் உயரிய விருதினை பெற்றுள்ள சுனிலா அபேயசேகர அம்மையார், சிறிலங்காவின் மனித உரிமைகள் பாதுகாப்பாளராகவும், 'INFORM' எனும் அமைப்பின் பிரதான இயக்குனராகவும் செயற்பட்டு வருபவர். அத்துடன், சிங்கள இனத்தவர்களாளும், தமிழர்களாலும் பெரிதும் மதிக்கப்படும் ஒரு நபர்.
போரினால் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்த சுமார் 300,000 மக்களை இவ் இடைத்தங்கல் முகாம்களில் அடைத்து வைத்து, கொடுமைப்படுத்தப்படுவதையும், அவர்கள் மீது கட்டவிழ்த்து விடப்படும் மனித உரிமைகளை மீறும் வன்முறைகள் பற்றியும், தமது நேரடி அனுபவங்கள் மூலம் உலகெங்கும் எடுத்துரைக்கிறது இவருடைய 'INFORM'அமைப்பு.
No comments:
Post a Comment