Wednesday, June 3, 2009

சிறீலங்காவில் இருந்து உடனுக்குடன் நாடுகடத்தப்படும் NGO பணியாளர்கள்!


சிறிலங்காவின் வட கிழக்கில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட அப்பாவி மக்களுக்கு சேவையாற்றும் நோக்கில், சிறிலங்காவில் தங்கியுள்ள சர்வதேச தன்னார்வ தொண்டு நிறுவன பணியாளர்களை அரசாங்கம் பலவந்தமாக நாடுகடத்தி வருவதாக 'த டைம்ஸ்' மீண்டும் குற்றம் சாட்டியுள்ளது. 'அரச சார்பற்ற தொண்டு நிறுவனங்கள் தற்சமயம் மிகுந்த பீதியுடன் இருக்கின்றன' நீங்கள் குரலை சற்று உயர்த்தினால், அடுத்து நாட்டை விட்டு வெளியே வீசப்படுபவர்களாக நீங்கள் இருப்பீர்கள்' என சர்வதேச தொண்டு நிறுவனம் ஒன்றின் மூத்த அதிகாரி கூறியுள்ளார்.நோர்வேயை தலைமையகமாக கொண்ட 'Fourt' எனும் அரச சார்பற்ற தொண்டு நிறுவனத்தின் முக்கிய அதிகாரி கடந்த சனிக்கிழமை சிறிலங்காவில் இருந்து நாடு கடத்தப்பட்டார்.

மேலும் வாசிக்க...

No comments: