Monday, August 3, 2009
வடக்கில் கண்ணிவெடிகளை அகற்றிமுடிக்க ஓரிரு வருடங்கள் செல்லும் - இந்திய இராணுவ நிபுணர்கள்
இலங்கையில் வன்னிப் பகுதியில் இடம்பெற்ற இறுதிப் போரின் போது வன்னிப் பிரதேசம் உட்பட வடக்கு கிழக்குப் பகுதிகளில் புதைக்கப்பட்டுள்ள கண்ணிவெடிகளை அகற்றுவதற்கு இன்னும் ஓரிரு வருடங்களாவது செல்லும் என்று, கண்ணிவெடி அகற்றும் பணிகளில் ஈடுபடுவதற்காக இலங்கை சென்றுள்ள இந்திய இராணுவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
இலங்கையின் வடக்கு, கிழக்கில் கண்ணிவெடிகளை ஓரளவுக்கேனும் அகற்றி முடிப்பதற்கு இன்னமும் ஓரிரு வருடங்கள் எடுக்கும். அதற்குப் பின்பும் மேலும் ஒரு வருடத்துக்குப் பின்னரே மக்கள் கண்ணி வெடிகள் அகற்றப்பட்ட இடங்களில் மீளக் குடியேறலாம் என்று கூறக்கூடியதாகவே கள நிலை உள்ளது. உலகிலேயே நிலக்கண்ணி வெடிகள் மிக அதிகளவில் புதைக்கப்பட்டிருக்கும் நாடுகளில் இலங்கையும் ஒன்றாகும்.
தொடர்ந்து வாசிக்க...
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment