மனித உரிமைகள் அமைச்சின் இணைப்பு செயலாளர் எஸ்.ஏ.அபேசிங்கவை இனந்தெரியாத நபர்கள் குழுவொன்று கடத்திவிட்டதாக செய்திகள்
வெளிவந்த நிலையில், தற்போது சிறிலங்கா காவற்துறையினரே கைது செய்துள்ளதாக அரசு தரப்பு கூறியுள்ளது.
மிரிஹான் காவல் நிலையத்தின் விசாரணை பிரிவினரால் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், வேறொரு விசாரணை ஒன்றுடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரிலே இவர் கைதானதாகவும், காவற்துறை ஊடக பேச்சாளர் ரஞ்சித் குணசேகர தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் மத்துகம காவல் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment