அண்மையில் சிறிலங்காவின் ஜனாநாயக சுதந்திரத்திற்கான ஊடக அமைப்பு வெளிக்கொணர்ந்த அரச பயங்கரவாதத்தினை சித்தரிக்கும் போர்க்குற்ற வீடியோ பதிவுகளை கொண்டு, சிறிலங்கா அரசு மீது போர்க்குற்ற விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் என சர்வதேச சமூகத்தின் முக்கியஸ்த்தர்கள் பலர் வலியுறுத்திவருகின்றனர்.
இவ்வீடியோ பதிவு உண்மையெனில் ஆச்சரியப்படத்தேவையில்லை - எரிக் சொல்ஹெய்ம்
நோர்வே ஊடகங்களும் இவ்வீடியோ பதிவினை தனது தேசிய தொலைக்காட்சிகளில் வெளிப்படித்தியிருந்தது, இந்த வீடியோ காட்சி உண்மையாக இருந்தால் அது ஆச்சரியத்திற்கு உரியதல்ல.இறுதி ஆண்டுகளில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கொல்லபப்ட்டும் காணமல் போயுமுள்ளனர். இந்த கொலைகள் மற்றூம் காணாமல் போன சமொஅவங்கள் குறித்து எந்தவிதமான சட்ட நடவடிக்கைகளோ, நீதி விசாரணைகளோ நடத்தப்படவில்லை.
இவற்றின் பின்னணியில் சிறிலங்கா அரசு இயங்கியதற்கான திடமான, பல ஆதாரங்கள் உள்ளன.
இறுதிக்கப்பட்ட போரின் போது வடக்கு பகுதி முழுவதும் தனிமைப்படுத்தப்பட்டிருந்தது. எந்தவொரு உதவி நிறுவனமோ, ஊடகவியலாளர்களோ அப்பகுதிக்கு அனுமதிக்கப்படவில்லை.
இவ்வாறான புறச்சூழல்கள், ஐ.நாவினால் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதை கடினமாக்கும் காரணிகளாக உள்ளன.
இந்த வீடியோ ஆதாரங்கள் விசாரணைகளுக்கான கோரிக்கையை வலுப்படுத்துகின்றன.
தொடர்ந்து வாசிக்க..
No comments:
Post a Comment