சிறிலங்காவின், இடைத்தங்கல் முகாம்களில், விடுதலைப்புலிகள் என சந்தேகத்தின் பேரில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும், நபர்களுக்கு எதிராக, வழக்கு தொடர்ப்பட வேண்டும், அல்லது விடுதலை செய்யப்பட வேண்டும் என உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
ஜே.ஏ.பிரான்ஸில் என்பவரினால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை மனித உரிமை மீறல் மனு குறீத்த விசாரணைகளின் போது, பிரதம நீதியரசர் அசோக டி சில்வா இவ்வாறு தெரிவித்துள்ளதுடன், அவர்களை நீண்ட காலம் தடுத்து வைப்பதில் அர்த்தமில்லை. அவர்கள் தொடர்பில் சட்டமா அதிபர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென தெரிவித்துள்ளார்.
தமிழீழ விடுதலைப்புலி உறுப்பினர்களை தொடர்ச்சியாக தடுத்து வைத்திருப்பதன் மூலம் பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளது. நீண்ட காலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள விடுதலைப்புலி உறுப்பினர்களிடம் விசாரணைகள் நடத்தப்பட்டிருந்தால் அவர்களை பிணையில் செல்ல அனுமதிக்க வேண்டும். என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து வாசிக்க...
No comments:
Post a Comment