இயக்குனரும், நடிகருமான சசிகுமார் நடித்த, சுப்பிரமணியபுரம், நாடோடிகள் இரு திரைப்படமும் சக்கை போடு போட்டு, ஓடி முடித்துள்ள வேளை, அடுத்த படத்தை இயக்கும் வேளைகளில் இறங்கிவிட்டார் சசி. இந்த திரைப்படத்திலும் நடிக்கிறீங்களா என கேட்டால், 'இல்லை, இயக்கம் மட்டும்தான்' என்கிறார்.ஆனால் நாடோடிகள் இயக்குனர், சமுத்திரக்கனி, இந்த படத்தில் முக்கிய வேடம் ஒன்றில் நடிக்கிறார்.
நாடோடிகள் கதாநாயகி அனன்யா, இந்த படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார். படத்தின் ஹீரோதான் வித்தியாசம். 54 வயது அவருக்கு. அதுடாங்க, பசங்க, நாடோடிகள் திரைபப்டங்களில் நடித்த ஜெய்பிரகாஷ் தான், இந்த படத்தோட ஹீரோ. (குறிப்பா டக்குனு உங்களுக்கு ஞாபகம் வரணும்னா, பசங்க திரைப்படத்தில் சொக்கலிங்க வாத்தியாரா வந்து, மகனுக்காக, சிகரட் குடிக்கிறத நிறுத்திடுவாரே. அவரே தான்)
தொடர்ந்து வாசிக்க....
No comments:
Post a Comment