Friday, September 4, 2009

மும்பை ஏர் இந்திய விமானத்தில் திடீரென தீ! - 213 பயணிகள் உயிர் தப்பினர்!


மும்பையில் இருந்து புறப்பட்ட ஏர் இந்திய விமானத்தில் திடீரென தீப்பிடித்துக்கொண்டதால், 223 பயணிகளின் உயிர்கள் காவு கொல்லப்படவிருந்த, அபாயகரமான நிகழ இருந்த பெரும் விபத்து ஒன்று, அதிர்ஷ்ட வசமாக நிறுத்தப்பட்டுள்ளது.

இன்று காலை 10.15 மணியளவில், இப்பரபரப்பு சம்வம் நடந்துள்ளது.மும்பை விமான நிலையத்தில் இருந்து ரியாத் நோக்கி புறப்பட்ட, இவ்விமானம், பறக்க துவங்கி சில நிமிடங்களில், இயந்திரப்பகுதியில் தீப்பிடித்துள்ளது.

உடனடியாக, விமான ஓடுதளத்திலேயே மீண்டும் விமானம் நிறுத்தப்பட்டு, பயணிகள் யாவரும், அவசர கதவுகள் வழியே வெளியேற்றப்பட்டுள்ளனர்.

தீயை அணைபப்தற்கு 4 தீயணைப்பு வண்டிகள் விமானதரிப்பிடத்திற்கு விரந்து வந்துள்ளன.தற்பொது நிலைமை கட்டுக்குள் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

விமானத்தில் ஏன் கோளாறு ஏற்பட்டது? என்பது குறித்து விசாரிக்க உத்தரவு இடப்பட்டுள்ளது.


தொடர்ந்து வாசிக்க....

No comments: