ஜேர்மனியில் எயிட்ஸ் நோயினை பற்றிய விழிப்புணர்வினை மக்களிடையே கொண்டு வரும் நோக்கில், ஒரு எயிட்ஸ் விழிப்புணர்வு முகவர் நிலையம், முன்னாள் ஜேர்மனிய சர்வாதிகாரி அடோல்ப் ஹிட்லர் ஒரு இளம்பெண்ணுடன் பாலியல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதனை சித்தரிக்கும் முகமாக தயாரித்த விளம்பரம் ஒன்று கடந்த புதன்கிழமை இணையதளம் வழியே யூடியூப்பில் ஏற்றப்பட்டு, ஐரோப்பிய மக்களின் பரவலான எதிர்பை சம்பாதித்துக்கொண்டது.
இதனால் இவ்விளம்பரம் 'யூடியூப்' இணையத்தளத்தில் இருந்து உடனடியாக நீக்கப்பட்டுள்ளது. ஆனால் அடுத்த வாரம் ஜேர்மனிய தொலைக்காட்சிகளிலும், திரையரங்குகளிலும் இவ்விளம்பரத்தினை காண்பிக்கப்போவதாக குறித்த முகவர் நிலையம் அறிவித்துள்ளது.
தொடர்ந்து வாசிக்க...
No comments:
Post a Comment