Friday, September 11, 2009
கிரீஸ் பகனி முகாம்களுக்குள் கண்டுகொள்ளப்படாத அகதிகளின் பேரவலம்
சிறிலங்காவின் 3 இலட்சம் மக்கள் அடைபட்டிருக்கும் இடைத்தங்கல் முகாம்கள் எனப்படும் திறந்த வெளிச்சிறைச்சாலகள் பற்றி அலட்டிக்கொள்ளாமல் உலகம் ஒரு பக்கம் அமைதி காக்க, இன்னொரு பக்கம் கிரீஸ் நாட்டின் லெஸ்வோஸ் நகரில், பகனி எனும் தடுப்பு முகாமில் அடைபட்டிருக்கும் 160 மக்கள் பற்றி, இரகசியமாக வெளியிடப்பட்ட ஒரு வீடியோ தொகுப்பு, அலட்டிக்கொள்ளாமல் உலகம் முழுக்க அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ஐரோப்பிய நாடுகளுக்கு சட்டவிரோதமாக குடியேறுபவர்கள் என்ற குற்றச்சாட்டின் பெயரில், பிடிபட்ட சுமார் 160 க்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள், குழந்தைகள், 180 நாட்களுக்கு மேலாக, தனித்தனியான 200 சதுர மீற்றர் பரப்பளவு கொண்ட இரு அறைகளில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். இவர்களை விடுவிப்பது பற்றியோ, அல்லது மேலதிக சட்ட நடவடிக்கை எடுப்பது பற்றியோ கிரீஸ் அரசு இன்னமும் எந்தவிதமான அறிவித்தல்களையும் இவர்களுக்கு கூறவில்லை.
தொடர்ந்து வாசிக்க
Labels:
4tamilmedia,
உலகசெய்திகள்,
செய்தி,
வாழ்வியல்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment