சிறிலங்கா நீதிமன்றத்தின் இத் தீர்ப்பை கண்டித்து சென்னையில் உள்ள முக்கிய ஊடகவியலாளர்கள் இணைந்து கண்டனக் கூட்டம் நடத்தியுள்ளனர். சென்னையில் உள்ள தியாகராஐநகர் வெங்கட் நாராயண சாலையில் அமைந்துள்ள தெய்வநாயகம் பள்ளியில் இன்று சனிக்கிழமை காலை 10 முதல் 2 மணி வரை இக் கூட்டம் நடைபெற்றது. இக் கூட்டத்தில் பல் வேறு ஊடகங்களைச் சேர்ந்த ஊடகவியலாளர்களும், சுயாதீன ஊடகவியலாளர்களும், கலந்து கொண்டார்கள்.
Saturday, September 12, 2009
சிறிலங்கா ஊடக அடக்குமுறைக்கு சென்னையில் கண்டனம்
சென்னையில் பத்திரிகையாளர்கள் இணைந்து, இலங்கை ஊடகவியலாளருக்கு ஆதரவாகக் கண்டனக் கூட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர். ஊடகவியலாளர் திசநாயகத்திற்கு வழங்கப்ட்டுள்ள தண்டனையைக் கண்டித்தே இக் கண்டனக் கூட்டம் நடைபெற்றது. பயங்கரவாத தடுப்புச் சட்டம் மற்றும் அவசரகால சட்டத்தின் கீழ், சிறிலங்கா நீதிமன்றம் பத்திரிகையாளர் திசாநாயகத்திற்கு 20 ஆண்டுகால சிறைத்தண்டனை வழங்கியது.
Labels:
4tamilmedia,
இந்தியச் செய்தி
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment