கூட்டுப் படைகளின் தலைமை அதிகாரி ஜெனரல் சரத் பொன்சேகா அந்தப் பதவியிலிருந்து விலகத் தீர்மானித்து, அதற்கான ,ராஜினாமாக் கடிதத்தை கடந்த 25ம் திகதி முற்பகல் ஜனாதிபதியிடம் கையளிக்கத் தயாராகியிருந்தார். எனினும், மாநாயக்கத் தேர்கள் சிலர் வழங்கிய அறிவுரைகளையடுத்து அவர் அந்தத் தீர்மானத்தைத் தற்காலிகமாக இடைநிறுத்தியிருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சரத் பொன்சேகாவிற்கு வழங்கப்பட்டுள்ள மிகவும் குறைந்த அதிகாரங்களுடனான பெயரளவிலான பொறுப்புக்களுக்குக்கூட இடையூறுகளை ஏற்படுத்தி, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதபாய ராஜபக்சவினால் தொடர்ந்தும் மேற்கொண்டுவரும் முரணான நடவடிக்கைகளைப் பொறுக்க முடியாத நிலையிலேயே சரத் பொன்சேகா பதவியிலிருந்து விலகத் தீர்மானத்ததாகத் தெரியவருகிறது.
தொடர்ந்து வாசிக்க...
No comments:
Post a Comment