
தமிழகத்தின் மதுரை மாவட்டம் உத்தப்புரத்தில், காவல் துறையினர் இப்பகுதியில் நடத்திய தடியடிக்கு எதிர்ப்பு தெரிவித்து, அப்பகுதியில் உள்ள ஒரு பிரிவுப் பெண்கள் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளதாக தமிழகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் பாலபாரதி, உண்ணாவிரதமிருக்கும் பெண்களை நேரில் சென்று சந்தித்து பேசினார். இப்பகுதியில் சாதியரீதியான தடையாக எழுப்பப்பட்டிருந்த ஒரு சுவரினால் பலத்த சர்ச்சை ஏற்கனவே இருந்தது. அப்பிரச்சனையில் திறந்துவிடப்பட்ட பாதையினைப் பயன்படுத்துவது தொடர்பிலேயே மீண்டும் பிரச்சனை எழுந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
தொடர்ந்து வாசிக்க
No comments:
Post a Comment