இது தொடர்பில் மேலும் அறிகையில், சென்னை ராயப்பேட்டை போலீஸ் நிலையம் பின்புறம் உள்ள பெசன்ட் தெருவில் வசித்து வரும், அதிமுகவைச் சேர்ந்த பழ. கருப்பையா வீட்டினுள், நேற்று மாலை திடீரென இனந்தெரியாத நாலைந்து பேர் வீட்டுக்குள் புகுந்து, பழ.கருப்பையாவை அடித்து உதைத்ததுடன், வீட்டிலுள்ள பொருட்களை அடித்து நொறுக்கி சேதப்படுத்தினார்கள்.
பின்னர் வீட்டின் முன்புறம் நிறுத்தி வைக்கப்பட்ட காரின் முன்பக்க கண்ணாடியையும் சேதப்படுத்தியுள்ளனர். இத்தாக்குதலின் போது, வீட்டிலுள்ளவர்கள் போட்ட கூச்சல் கேட்டு, அயலவர்கள் திரண்டு வர தாக்குதலில் ஈடுபட்டவர்கள் தப்பியோடியுள்ளனர்.
இது தொடர்பாக பழ.கருப்பையா போலீசில் முறைப்பாடு தெரிவித்துள்ளார். காவல்துறை விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது எனவும் தெரிவிக்கப்படுகிறது. இத்தாக்குதல் நடவடிக்கைக்கு பழ. கருப்பையா செம்மொழி மாநாடு குறித்துத் தெரிவித்து வந்த கருத்துக்களே காரணம் எனத் தெரிவிக்கப்படுகிறது.
கருப்பைய்யா சில நாட்களுக்கு முன்னர் ஜெயா தொலைக்காட்சியில் செம்மொழி மாநாடு தொடர்பாக காட்டமான விமர்சன நேர்காணல் ஒன்றை வழங்கியிருந்தார். தமிழகம் முழுக்க பரவலாக அந்த நேர்காணல் வரவேற்பைப் பெற்றிருந்தது.
இத் தாக்குதல் குறித்து பலரும் கண்டனங்கள் தெரிவித்து வருகின்றனர். அதிமுக செயலர் செல்வி்: ஜெ.ஜெயலலிதா ......தொடர்ந்து வாசிக்க...
No comments:
Post a Comment