ஈழத்தமிழர்கள் பொறியியல் கல்வி பெறும் விஷயத்தில் தமிழக அரசின் உயர்கல்வித்துறை பிறப்பித்துள்ள அரசானை ஒவ்வொரு ஈழத்தமிழ் மாணவனின் வாழ்வையும் கேள்விக்குறியாக்கியுள்ளது என நாம் தமிழர் இயக்க ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். ஈழத்தமிழர்களுக்கு கல்வி மறுக்கும் அரசாணையை தமிழக அரசு திரும்ப பெற வேண்டும் என சீமான் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு :
அவ்வறிக்கையில், ’’வீடிழந்து நாடிழந்து தொப்புள் கொடி உறவு என்று நம்மை நாடி வரும் நம் சகோதரர்களுக்கு இங்கு ஆட்சியில் இருப்பவர்கள் செய்யும் கொடுமையும் கெடுபிடியும் கொஞ்ச நஞ்சம் இல்லை.
நாட்டை இழந்தாலும் தம் கல்வியை இழக்க கூடாது என்று நம் தொப்புள் கொடி ஈழ உறவுகள், படித்து முன்னேறவேண்டும் என்று மேலெழுந்து வந்தால் அதிலும் பேரடி தருகிறார்கள்.
ஈழத்தமிழர்கள் பொறியியல் கல்வி பெறும் விஷயத்தில் தமிழக அரசின்
தொடர்ந்து வாசிக்க...
No comments:
Post a Comment