Sunday, July 25, 2010

எந்திரன் ஆடியோ ரிலீஸ் கோலாலம்பூரில்! - படையெடுக்கும் எந்திரன் டீம்!

AddThis Social  Bookmark Button
எந்திரன் பீவர் எகிறிக்கொண்டே போகிறது. கலைஞர் வரை பற்றிக்கொள்கிறதென்றால் பாருங்களேன்! இம்மாத இறுதியில் ஜூலை 31 ம் திகதி மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் எந்திரன் பாடல் வெளியீட்டு விழா பிரமாண்டமாக நடைபெறுகிறது.
இதற்கான எந்திரன் படக்குழுவினர் கோலால்ம்பூருக்கு பயணமாகவிருக்கின்றனர். இசைப்புயல் ஏ.ஆர் ரஹ்மான் இசையில் சிவாஜி பாடல்களை போல இப்பாடல்களும் சூப்பர் ஹிட்டாகும் என எதிர்பார்க்கப்படுகிறது! படத்தில் ஆடியோ உரிமை பெற பல கம்பனிகள் முட்டி மோதின. இறுதியில் வெற்றி கிடைத்திருப்பது திங்க் மியூசிக் கம்பனிக்கு. சுமார் ஏழுகோடி கொடுத்து எந்திரன் படத்தின்
ஓடியோ உரிமையை அந்நிறுவனம் வாங்கியுள்ளது. இதில் தமிழுடன், தெலுங்கு, இந்திப்படங்களின் பாடல் உரிமையும் அடங்கும்.

பாடல் வெளியீட்டு விழாவில், தமிழக முதலவர் கலைஞர் கருணாநிதியின் வாழ்த்து செய்தியும் இடம்பெற்றால் நன்றாகவே இருக்கும், என நினைத்த ஒருங்கிணைப்பு குழுவினர் (சண் டீவி) தயக்கத்துடன் கலைஞரை அணுகியுள்ளனர்.

அறிவாலயத்தின் மூன்றாம் மாடியில் அமைந்துள்ள கலைஞர் தொலைக்காட்சி அலுவலகத்திற்கு எப்பவோ ஒரு முறை விஜயம் செய்பவர் திடீரென, கடந்த இரு தினங்களுக்கு முன்னர் அங்கு வந்தார். கலைஞருக்காகவே காத்திருந்த சன் டீவி ஒளிப்பதிவாளர்களும், ஊழியர்களும் கலைஞரின் வாழ்த்து செய்தியை பதிவு செய்துவிட்டு, பறந்தனராம்!

read more...

1 comment:

Anonymous said...

மலையாகரங்க கொஞ்சம் நல்ல இருக்கிறது இவனுகளுக்கு
பிடிக்கலை போல் இருக்கு அதான் இந்த ஆட்டத்தை அங்கேயும்
என்ன கொடும சர் இது