(படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)உத்தபுரம் தலித் மக்களின் அடிப்படை மனித உரிமைப் பிரச்சனைகளுக்கு தீர்வு காணக்கோரியும், சிறையில் உள்ள உத்தப்புரம் தலித் மக்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் எனக் கேட்டும், காவற்துறை அத்துமீறல்களுக்கு முடிவு காண வேண்டுமென்று கோரி மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நாடாளுமன்ற உறுப்பினரும், மார்க்சிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினருமான டி.கே.ரங்கராஜன் தலைமையில் முற்றுகைப்போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் மாவட்ட ஆட்சியர் அலுவலக அதிகாரிகளுக்கும் இடையில் நடத்தப்பட்டபட்ட பேச்சுவார்த்தை உடன்பாடு எட்டப்படாத நிலையில் போராட்டம் நடத்தியவர்கள் மீது காவல்துறை தடியடி நடத்திக் கைது செய்திருப்பதாக அறியப்படுகிறது.
தொடர்ந்து வாசிக்க
No comments:
Post a Comment