சிறிலங்கா நாடாளுமன்றத்தில்நேற்று ஐக்கிய தேசியக்கட்சி உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரனுக்கும், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கும் இடையில் மிகக் கடுமையான வாக்குவாதம் மூண்டது. இந்த வாதத்தின் ஒரு கட்டத்தில், மறைந்த நாடாளுமன்ற உறுப்பினர் மகேஸ்வரனை நீங்கள்தானே என ஆவேசமாகக் குற்றஞ்சாட்டினார் என தெரியவருகிறது.
நேற்று நாடாளுமன்றத்தில் நடந்த வரவு செலவுத்திட்ட விவாதத்தின் போது, ஐக்கிய தேசிய கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன் உரையாற்றுகையில், யாழ்ப்பாணத்தில் 7 ஆயிரத்துக்கு மேற்பட்ட பட்டதாரிகள் வேலை வாய்ப்பின்றி உள்ளனர் எனவும், ஆளும் தரப்பில் அங்கம் வகிக்கும் ஒரு கட்சியைச் சேர்ந்தவர்கள், தங்களுக்கு தேவையானவர்களுக்கு மாத்திரமே அரசின் பயன்கள் சென்றடைய வழி செய்வதாகவும் தெரிவித்தார்.
அவரது இந்த உரையில் குறுக்கிட்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அப்படி யாரை நீங்கள் குறிப்பிடுகின்றீர்கள் எனக் கேட்க, அரசாங்கத்தில் பல கட்சிகள் இருப்பதாகவும், தன்னுடைய குற்றச்சாட்டு, யார் குற்றம் செய்தார்களோ அவர்களுக்கே உறுத்தும் எனவும் குறிப்பிட்டார். இந்த வாதம் தொடர்கையில், ஒரு கட்டத்தில் விஜயகலா மகேஸ்வரன், நீங்கள் தானே மகேஸ்வரனை கொலை செய்தீர்கள்தொடர்ந்து வாசிக்க...
No comments:
Post a Comment