Monday, October 27, 2008

ஈழத்தமிழர் குறித்து தமிழக அரசுக்கு மத்திய அரசு வழங்கிய உறுதி மொழிகள்.(ஸ்பெசல் சர்வே)

1 comments

நம்பிக்கையானது.
நடைமுறைச் சாத்தியமற்றது.
வெற்றுத்தனமானது
சூழ்ச்சிமிக்கது.

நீங்களும் வாக்களிக்க 4tamilmedia.com இன் வாக்கெடுப்பு பகுதிக்கு (வல‌ப்பக்கம்) செல்லுங்கள்.

Friday, October 24, 2008

சீமான், அமீர் கைதை கண்டித்து நாளை திரைப்படங்கள் அனைத்தும் ரத்து (ஓடியோ செய்தி இணைப்பு)

4 comments
தமிழின உணர்வாளரும், திரைப்பட இயக்குனருமான சீமான் சற்றுமுன்னர் சென்னை வளசரவாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் வைத்து தமிழக காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று தமிழகம் முழுவதும் ஈழத்தமிழருக்கு ஆதரவாக நடைபெற்ற மனிதச்சங்கிலி போராட்டத்தில் கலந்துகொண்டு வீடு திரும்பிய சமயத்திலேயே, வீட்டில் வைத்து இக்கைது நடைபெற்றிருப்பதாக அறியமுடிகிறது. சீமான், மற்றும் அமீர் ஆகியோரின் கைதை கண்டித்து நாளை தமிழகம் முழுவதும் உள்ள அணைத்து திரையரங்குகளும்

மேலும்

திரைப்பட இயக்குனரும், தமிழார்வலருமான இயக்குநர் சீமான் எந்நேரமும் கைது செய்யப்படலாம்

0 comments
தற்போது வந்த செய்தி:தமிழின உணர்வாளரும், திரைப்பட இயக்குனருமான சீமான் எந்நேரமும் கைது செய்யப்படலாம். சென்னை வளசரவாக்கத்தில் உள்ள அவரது வீட்டின் முகன்னால் செய்தி அறிந்த திரைப்பட இயக்குனர்கள், துறைசார்கலைஞர்கள், ஆதரவாளர்கள் பெருமளவில் குழுமியுள்ளதாக, அங்கிருந்து எமது செய்தியாளர் அறியத்தருகின்றார். ஊடகவியலாளர்கள் , காவற்துறைசார்ந்தோரும் குழுமியுள்ளதாகவும், தற்போது சீமான் வீட்டில் இல்லை. வெளியே சென்றுள்ள அவர் வீடு திரும்பும் சமயத்தில் கைது செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுவதாகவும், .

மேலும் விரிவாக

ஈழத்தமிழருக்காகத் தமிழகத்தின் அனைத்துத் தரப்பினரும், சென்னையில் இருந்து கன்னியாகுமரிவரை கைகோர்த்துக் களமிறங்கினர். (ஓடியோ இணைப்பு)

0 comments
தமிழகத்தின் தலைநகர் சென்னையில் தற்போது கொட்டும் மழையை துச்சமெனத் தூக்கியெறிந்துவிட்டு, மழை வெள்ளமோ, மக்கள் வெள்ளமோ என என்னும் வகையில், பெருமளவான மக்களுடன், உணர்வு பூர்வமாக மனிதச் சங்கிலிப் போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அந்தக் களத்திலிருந்து எமது செய்தியாளர் தரும் குரல்வழிச்செய்தி

ஓடியோ இணைப்புக்கு

Thursday, October 23, 2008

தனித் தமிழ் நாடு அமையுமா? : கைதுக்கு முன் கண்ணப்பன் சிறப்புப் பேட்டி

0 comments

கைதுக்கு முன் கண்ணப்பன் சிறப்புப் பேட்டி - நமது சிறப்புச் செய்தியாளர். தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்புக்கு ஆதரவாகப் பேசியதாக மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் வைகோ, அவைத் தலைவர் கண்ணப்பன் ஆகியோர் இன்று கைது செய்யப்பட்டனர். கைது சம்பவத்துக்கு சில மணி நேரத்துக்கு முன்பாக கண்ணப்பன்

நமக்களித்த சிறப்புப் பேட்டி:

விடுதலைச்சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன் கைது.

1 comments
ஈழத்தமிழர் பிரச்சனை வலியுறுத்தும் வகையில் இன்று தமிழகத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் இரயில் மறிப்புப் போராட்டத்தில், விடுதலைச்சிறுத்தைகள் அமைப்பின் தலைவர் தொல். திருமாவளவன் உட்பட ஆயிரக்கணக்கானோர் கைதாகியுள்ளனர். மேலதிக விபரங்கள் ஆடியோச் செய்திகளை இங்கே காணலாம்

Saturday, October 18, 2008

கலைஞர் பார்த்து கண் கலங்கிய ஈழத்துக் கண்ணீர் வீடியோ

0 comments

தமிழக முதலமைச்சர் கலைஞர் பார்துக் கலங்கிய ஈழத்துக் கண்ணீர் சீ.டி குறித்து, குமுதம் ரிப்போட்டர் செய்தி வெளியிட்டுள்ளது. அந்த வீடியோவில் என்ன இருந்நது எனும் விபரஙகளையும் வெளியிட்டுள்ளது. மேலும் விபரங்களுக்கும்,
வீடியோவைக் காணவும்

Thursday, October 16, 2008

மக்கள் போராட்டம் பிறந்தது, மானாட மயிலாட மறந்தது.

1 comments

ஈழத்தமிழர் பிரச்சனையில் இருந்தாற் போல் திடீர் அக்கறையும் பாசமும் கொண்டு தமிழக அரசியற்கட்சிகள் களங் குதித்திருப்பது, கனவு போலத் தோன்றினாலும்இதுவொன்றும் புதுமையில்லை. ஏனென்றால் தமிழகத்தின் அடிமட்டத் தொழிலாளிப் பாமரனிடம், அன்று முதல் இன்றுவரை, என்றும் மாறாமல் நிறைந்திருக்கிறதுஈழத்தமிழர் மீதான பாசமும் பரிவும்.

ஆனால் அதை எப்போதும் ஒரேமாதிரியாக வெளிப்படுத்த விடுவதில்லை, தலைமையேற்கும் அரசியற்கட்சிகள். தமக்குச் சார்ப்பான சாதகமான, இலயிப்புக்களுக்கு பாமரர்களைத் தாளம் போட வைப்பன அவை. அதே அரசியற் கட்சிகள் பாமரரின் நாடிபிடிக்கத் தேடிவரும் நேரம் தேர்தல்காலமொன்றுதான்.

தொடர்ந்து வாசிக்க

Monday, October 6, 2008

திமுக ஈழஆதரவுப் பொதுக் கூட்டம் - வீடியோத்தொகுப்பு

1 comments











06.10.08 சென்னை மயிலாப்பூரில் திராவிடமுன்னேற்றக்கழகம் நடாத்திய ஈழ ஆதரவுப் பொதுக் கூட்டம் தொடர்பான வீடியோத் தொகுப்பு, மற்றும் தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதியின் உரை ஒலித் தொகுப்பு என்பனவற்றைக் காண

Friday, October 3, 2008

கம்யூனிஸ்ட் கட்சியின் ஈழத்தமிழர் ஆதரவுப் போராட்ட வீடியோத் தொகுப்பு பகுதி 1

0 comments











02.10.08 சென்னை சேப்பாக்கத்தில், ஈழத்தமிழர் போராட்டத்திற்கு ஆதரவாக கம்யூனிஸ்ட் கட்சி நடாத்திய ஆதரவுப்போராட்டத்தின் சில துளிகள் வீடியோ ஒளிப்பதிவில்.

Video Link


Thursday, October 2, 2008

மூன்று தசாப்தங்களாக ஒடுக்கப்படும் ஈழத்தமிழ்மக்களுக்காக இந்திய அரசு குரல் கொடுக்க வேண்டும். - மத்திய குழு உறுப்பினர் டி. ராஜா

2 comments
மகாத்மா காந்தி நினைவு நாளான இன்று தமிழகமெங்கும், ஈழத்தமிழர் போராட்டத்திற்கு ஆதரவாக போராட்டம் நடாத்தப் போவதாக, அகில இந்திய கம்யூனிஷ்ட் கட்சி அறிவித்திருந்தது. இந்தப் போராட்டத்திற்கு தமிழக முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா, தேமுதிக தலைவர் விஜய்காந் ஆகியோரும் மேலும் பல கட்சித் தலைவர்களும் ஆதரவு தெரிவித்திருந்த நிலையில், இன்று திட்டமிட்டபடி மாநிலத்தின் பல் வேறு பகுதிகளிலும் இப் போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
சேப்பாக்கத்திலிருந்து நேரடி ஆடியோ செய்தியைக் கேட்க