
வன்னி வான்பரப்பில் பொது மக்கள் மீ தாக்குதல் நடத்த வந்த சிறிலங்கா விமானப்படை விமானம் ஒன்று சுட்டு விழுத்தப்பட்டுள்ளதாக அறியப்படுகிறது. இன்று முற்பகலில் , வான் தாக்குதல் நடாத்த வந்த விமானத்தின் மீது தரையிலிருந்து விமான எதிர்ப்பு ஏவுகணையால் நடத்தப்பட்ட தாக்குதலில் விமானம் விழுத்தப்பட்டுள்ளதாகச் முந்திக்கிடைத்த செய்திகள் தெரிவிக்கின்றன. விமானம் எரிந்தவாறு விழுந்ததைப் பொது மக்கள் கண்டதாகவும் அறியப்படுகிறது. இது குறித்த விபரங்கள் ஏதும் இன்னமும் விடுதலைப்புலிகளாலோ, சிறிலங்கா அரச தரப்பாலோ உறுதிப்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலதிக விபரங்கள் விரைவில்...