மாணவர்கள், இளைஞர்கள், அலுவலகர்கள் எனபல்வேறு தரப்பினரும் குழுக்களாக வந்து குவிந்த வண்ணமிருப்பதாக அங்கிருந்து எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.
அங்கிருந்து எமது செய்தியாளர் சற்று முன் வழங்கிய ஒலிவழிச் செய்தி மற்றும் காணொளி இணைப்பு
மாணவர்கள், இளைஞர்கள், அலுவலகர்கள் எனபல்வேறு தரப்பினரும் குழுக்களாக வந்து குவிந்த வண்ணமிருப்பதாக அங்கிருந்து எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.
அங்கிருந்து எமது செய்தியாளர் சற்று முன் வழங்கிய ஒலிவழிச் செய்தி மற்றும் காணொளி இணைப்பு
இலங்கை விமானப்படையினரின் மிக் வைற்றர் ஜெட் ரக போர் விமானம் ஒன்று இன்று புதன்கிழமை வன்னிப் போர்முனையில் பறப்பில் ஈடுபட்டிருந்த சமயம் தாக்குதலுக்கு உள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வன்னியில் உள்ள வன்னிபடைத் தலைமையகத்தை மேற்கோள் காட்டி, வன்னி வான்பரப்பில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக வெளிநாட்டு செய்தியாளர்கள் தெரிவித்துள்ளனர். எனினும் தமிழீழ விடுதலைப்புலிகளின் தரப்பு இது தொடர்பாக எவ்வித கருத்துக்களையும் வெளியிடவில்லை.
இவ்விமானம் பறப்பில் ஈடுபட்டிருந்தபோது, மூன்று விமானப்படையினர் விமானத்தில் இருந்துள்ளனர் எனவும், இரஷ்யத் தயாரிப்பான இந்த குண்டு வீச்சு விமானம் , லேசர் கருவி வசதி, ரொக்கட், ஏவுகணைகள் மற்றும் பல்வகைப்பட்ட பெருந்தொகையான குண்டுகளையும் எடுத்துச் செல்லக்கூடிய வசதியும் மிக்கது.
விடுதலைப்புலிகளின் இலக்குகள் எனச் சொல்லிக்கொண்டு, வன்னியில் இடம்பெயர்ந்த பொதுமக்கள் மீது் நடத்தப்பட்ட தடைசெய்யப்பட்ட கிளஸ்டர் குண்டுவீச்சுகள் இந்த விமானத்தின் மூலமே நடத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஆயினும் இச் செய்தி இன்னும் உறுதிசெய்யப்படவில்லை .
விடுதலைச்சிறுத்தைகள் அமைப்பின் தலைவர் தொல். திருமாவளவன் இலங்கையில் போர்நிறுத்தம் செய்து, தமிழ்மக்களைக் காப்பாற் வகைசெய்யுமாறு, இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டுமென, இந்திய மத்திய அரசைக் கோரி நடாத்திய சாகும்வரை உண்ணாவிரதப்போராட்டத்தை, விடுதலைச்சிறுத்தைகள் அமைப்பின் முக்கிய உறுப்பினர்கள், அரசியற் கட்சித் தலைவர்கள், கேட்டுக்கொண்டதற்கமைவாக 18.01.09 ஞாயிற்றுக்கிழமை நிறைவு செய்தார்.
போராட்டத்தை நிறைவு செய்ய முன் விரிவான ஒரு உரையில் தன்போராட்டத்தின் நோக்கம், நிறைவு, நீட்சி என்பன பற்றி விரிவாகப் பேசினார். அவரது முழு உரையின் ஒலிவடிவம்.
இன்று காலை அவர் மிகவும் சோர்வுடன் காணப்பட்டதாகவும், பேண்ட், சட்டை உடையிலிருந்து லுங்கிக்கு மாறியிருந்த அவர் நாற்காலியில் சோர்வோடு அமர்ந்திருக்கவும் காணப்பட்டதாகத் தெரியவருகிறது. வைத்தியர்கள் அவ்வப்போது, அவரது உடல்நிலையைப் பரிசோதனை செய்து வருகின்றனர். ரத்த அழுத்தம் குறைவாக உள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். ரத்தத்தில் சர்க்கரை அளவு குறைந்து போய்விட்டதால் அவருக்கு மயக்கம், தலை சுற்றல் ஏற்பட்டு வருவதாகவும், வெறும் தண்ணீர் மட்டுமே அருந்துவதால் வயிற்று புரட்டலும் ஏற்பட்டு வருவதாகவும், வைத்தியர்கள் தெரிவி்க்கின்றனர்.
இந்நிலையில் முதலுதவிக்குழுவொன்றும், அம்புலன்ஸ் வண்டியொன்றும், வைத்தியர் குழுவும், தயாராக இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. தற்போது, திருமாவளவனின் தாயார் பெரியம்மா, தம்பி செங்குட்டுவன் ஆகியோரும் உண்ணாவிரத மேடையில் அவர் அருகிலேயே இருந்து கவனித்து வருகின்றனர்.
ஓடியோ செய்தி