
சிங்கள இனவெறி இராணுவத்தின் வக்கிர உச்சமாக, போரில் களப்பலியான பெண் போராளிகளை நிர்வாணப்படுத்திப் பாலியல் வக்கிரம் செய்த பின் அதை காட்சிப்பதிவு செய்து மகிழ்ந்திருக்கும் அதிர்ச்சித் தகவல் தெரியவந்திருக்கிறது. எமக்குக் கிடைக்கப்பெற்ற ஒரு வீடியோப் பதிவில் மனதை அதிரவைக்கும் அந்தக் கொடூரம் பதிவாகியிருப்பதைக் கண்டு அதிர்ந்து போனோம். பெண் போராளிகளை அவமரியாதை செய்யும் வகையில் அமைந்திருந்த அந்தக் காட்சிப்பதிவினை வெளியிட எமது மனச்சாட்சி இடந்தரவில்லை. ஆயினும் இந்தப் போரியற் குற்றத்தை உலகின் கண்களுக்கு வெளிக்கொணர வேண்டிய ஊடக தார்மீக அவசியம் கருதி அக்காட்சிப் படிமத்தில் சில படங்களைத் தணிக்கை செய்து வெளியிடுகின்றோம். விரிவான செய்திகளுக்கு

















மகாத்மா காந்தி நினைவு நாளான இன்று தமிழகமெங்கும், ஈழத்தமிழர் போராட்டத்திற்கு ஆதரவாக போராட்டம் நடாத்தப் போவதாக, அகில இந்திய கம்யூனிஷ்ட் கட்சி அறிவித்திருந்தது. இந்தப் போராட்டத்திற்கு தமிழக முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா, தேமுதிக தலைவர் விஜய்காந் ஆகியோரும் மேலும் பல கட்சித் தலைவர்களும் ஆதரவு தெரிவித்திருந்த நிலையில், இன்று திட்டமிட்டபடி மாநிலத்தின் பல் வேறு பகுதிகளிலும் இப் போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. 







