1987ம் ஆண்டு சிறிலங்காத் தலைநகர் கொழும்பில், இந்திப்பிரதமர் ராஜீவ்காந்திக்கு வழங்கப்பட்ட இராணுவ அணிவகுப்பில் வைத்து , விஜேமுனி எனும் சிங்கள இராணுவச் சிப்பாய் துப்பாக்கிக் கட்டையால் தாக்குகின்றார்.

தொடர்ந்து வாசிக்க
1987ம் ஆண்டு சிறிலங்காத் தலைநகர் கொழும்பில், இந்திப்பிரதமர் ராஜீவ்காந்திக்கு வழங்கப்பட்ட இராணுவ அணிவகுப்பில் வைத்து , விஜேமுனி எனும் சிங்கள இராணுவச் சிப்பாய் துப்பாக்கிக் கட்டையால் தாக்குகின்றார்.
ஆஸ்திரேலியக் கப்பலில், இந்தோனேஷியத் துறைமுகத்தில் உள்ள 78 இலங்கையர்களையும் இறக்குவதற்குப் பலத்தைப் பயன்படுத்தப் போவதில்லையென இந்தோனேஷியா தெரிவித்துள்ளது.
இலங்கையில் இறுதிக்கட்ட யுத்தத்தின் போது, பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்களை கொன்று குவித்ததாக, சிறிலங்கா ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மீதும், இராணுவத்தினர் மீதும் தமிழக தமிழின உணர்வாளர்கள் முதற்கொண்டு சர்வதேச மனித உரிமை அமைப்புக்கள் வரை குற்றம் சுமத்தியுள்ள வேளையில்,
இலங்கைத்தமிழர்களுக்காக குரல் கொடுத்து வரும் தொப்புள் கொடி உறவுகள், தமிழகத்தில் உள்ள வேளையில், ஆந்திர பிரதேசத்தில் உள்ள திருப்பதி வெங்கடாச்சலபதி ஆலயத்திற்கு விஜயம் மேற்கொள்ள சிறீலங்கா ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச திட்டமிட்டிருப்பதாக தெரிய வந்துள்ளது.இதன் படி, சிறப்பு விமானம் மூலம் கொழும்பில் இருந்து ரேணிகுண்டா விமான நிலையத்திற்கு நாளை வருகையளிக்கும் அவர், பின்னர் கால் மூலம் திருப்பதி மலைக்கு செல்லவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.நாளை நண்பகல் 1.30 மணியளவில் ஏழுமலையானை தரிசனம் செய்வதுடன், அவருக்கு தேவஸ்த்தானம் சார்பில் சிறப்பான வரவேறு அளிக்கப்டவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
தொடர்ந்து வாசிக்க...இந்திய, அவுஸ்த்திரேலிய அணிகளுக்கு இடையே நேற்று நடைபெற்ற இரண்டாவது சர்வதேச ஒரு நாள் போட்டியில், 99 ரன்களால் வெற்றி பெற்று, சரியான பதிலடியினை கொடுத்துள்ளது இந்தியா!
இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியை படுகொலை செய்வதற்கு பயன்படுத்திய ஆர்.டி.எக்ஸ். வெடிமருந்து இந்தியா புலனாய்வு பிரிவான றோவினால் தற்கொலைதாரிகளுக்கு வழங்கப்பட்டதாக அதிர்ச்சித் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. சிறிலங்காவின் புலனாய்வுப் பிரிவுக்கு நெருக்கிய வட்டாரங்களிலிருந்தே இத் தகவல் கசிய விடப்பட்டிருப்பதாகவும் தெரிய வருகிறது.
பயங்கரவாதம் தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்பவரும், விடுதலைப்புலிகளின் சர்வதேசத் தொடர்பாளரான கே.பி.யின் கைதில் முக்கிய பங்காற்றியவருமான, சிங்கப்பூரை தளமாக கொண்டியங்கும் றொகான் குணவர்த்தன, ராஜீவ் கொலை தொடர்பான ஆய்வில், மேற்கண்ட குற்றச்சாட்டைக் குறிப்பிட்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. பின்னர் சிறிலங்கா உளவுத்துறைசார் ஊடகங்கள் வாயிலாக இது விடயம் கசிய விடப்பட்டிருப்பதாகவும் அறியப்படுகிறது.
கைதுசெய்யப்பட்டுக் காவலில் வைத்திருக்கும், குமரன் பத்மநாதன் எனும் கே.பி.யை விசாரிப்பதற்கு இந்தியா விடுத்த கோரிக்கைகள் சிறிலங்கா அரசினால் தொடர்ச்சியாக நிராகரிக்கப்பட்ட நிலையில், இருநாடுகளின் புலனாய்வு பிரிவினருக்கு இடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது...இந்தோனேஷியா அகதிகளை கொண்டுவந்து குவிக்கும் இடமல்ல என்று ஆளுநர் தெரிவித்தார்.
அவுஸ்திரேலியாவை நோக்கி இலங்கையர்கள் சென்று கொண்டிருந்த படகு கடந்த வாரம் சுமாத்ரா தீவுக்கருகில் கோளாறுக்குள்ளானதை அடுத்து அதிலிருந்த இலங்கையர்களை மனிதாபிமான அடிப்படையில் ஏற்றுக்கொள்ள இந்தோனேஷியா அவுஸ்திரேலியாவுக்கு இணக்கம் தெரிவித்திருந்தது.பிரதமர் மன்மோகன் சிங்கினையும், காங்கிரஸ் தலைவி சோனியா காந்தியினையும் சந்தித்திருந்த, இலங்கை சென்று வந்த தமிழக நாடாளுமன்றக்குழுவில் தொல்.திருமாவளவன் இடம்பெறாதது, தி.மு.க, காங்கிரஸில் இருந்து திருமா புறக்கணிப்புக்கான ஆரம்பமாக அமைந்துள்ளது.
இலங்கையில் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும், சிறிலங்கா இராணுவத்தினருக்கும் இடையே இறுதிக்கட்ட யுத்தம் நடைபெற்ற கால கட்டத்தில் பெருமளவான பொதுமகக்ள் கொல்லப்பட்டதாகவும், யுத்தக்குற்றச்செயல்கள் இடம்பெற்றதாகவும், மனித உரிமை அமைப்புக்கள் தெரிவித்திருந்த நிலையில் அமெரிக்கவும் இதனை ஆமோதித்திருந்தது. எனினும், சிறிலங்கா அரசு திட்டவட்டமாக மறுத்ததுடன், இது ஒரு தவறான கருத்தென கூறியது. இந்நிலையில், போர்க்குற்றத்திற்கான ஆதாரங்கள், தகவல்கள் உள்ளடக்கியதாக, அறிக்கை ஒன்றினை அமெரிக்க இராஜாங்க திணைக்களம் தற்போது வெளியிட்டுள்ளது.
கற்பனை செய்து பார்த்து விட்டு, 'நல்லா இருக்கே' என்று சொல்லுவோம்!
ஆனால் நிஜமாகவே அப்படி செய்து பார்ப்போம் என புறப்பட்டுவிட்டார் அவுஸ்த்திரேலிய குட்டிப்பெண் ஜெஸிகா வட்சன்! 11 வயதில் இருந்து துரத்திய கனவு, விடா முயற்சி, இன்று அவருக்கு அதனை நனவாக்கத்தூண்டியுள்ளது.