Thursday, July 30, 2009
AVM ஸ்டுடியோவில் தீ விபத்து, விஜய் படப்பிடிப்புத்தளம் எரிந்தது.
தமிழகத்தின் முக்கிய சினிமாக் கலையமான , ஏ.வி.எம். ஸ்டூடியோவில் இன்று அதிகாலை தீவிபத்து ஏற்பட்டதாகத் தமிழகச் செய்திகள் தெரிவிக்கின்றன.இத் தீ விபத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் 'வேட்டைக்காரன்' படப்பிடிப்பு அரங்கும், விஜய் தொலைக்காட்சியின் படப்பிடிப்புத் தளமும் எரிந்து நாசமானதாக அறியவருகிறது
தொடர
வன்னி முகாம் மக்கள் மனநிலை தொடர்பில் ஐ.நா செயலளார் கவனம் !
வன்னியில் இடம்பெற்ற மோதல்களின் போது இடம்பெயர்ந்து இடைத்தங்கல் முகாம்களில் தங்கியுள்ள தமிழ் மக்களின் நிலை தொடர்பாக சர்வதேசத் தலைவர்கள் சிலருடன் தான் ஆலோசனை நடத்தியுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் தெரிவித்துள்ளார். இந்த விடயம் பற்றி வாஷிங்டனில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் உரையாற்றிய அவர் சமீபத்தில் இலங்கைக்குத் தான் மேற்கொண்டிருந்த விஜயத்தின் போது, ஜனாதிபதி வழங்கிய வாக்குறுதிகளை மிக விரைவில் அவர் நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
தொடர்ந்து வாசிக்க
அ.தி.மு.க.வில் இருந்து விலகிய அனிதா இராதாகிருஷ்ணன் தி.மு.க வில் இணைகிறார்!
அ.தி.மு.கவில் இருந்து திடீரென நீக்கப்பட்ட அமைச்சரும், பாராளுமன்ற உறுப்பினருமான 'அனிதா ராதாகிருஷ்ணன்', தனது அமைச்சர் பதவியை இராஜினமா செய்துவிட்டு, தி.மு.கவில் இணையப்போவதாக அறித்துள்ளார்.
நேற்று வியாழக்கிழமை, தமிழக முதல்வர் கருணாநிதியினை சந்தித்து பேசிய போதே, இம்முடிவை கூறியுள்ள அனிதா ராதாகிருஷ்ணன், ஒன்றரை வருடங்களாக அ.தி.மு.கவில் கடுமையான
தொடர்ந்து வாசிக்க...
பொட்டம்மான் உயிருடன் தப்பியிருக்கலாம் என இராணுவ புலனாய்வு துறை தகவல்!
சிறிலங்கா படையினருக்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையில் நடைபெற்ற இறுதிக்கட்ட யுத்தத்தில், தமிழீழ விடுதலைப்புலிகளின் முக்கிய தளபதிகள் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்ட போதும்
மேலும்
google க்கு போட்டியாக இணையும் Yahoo - Mirosoft!
சில வருடங்களின் வதந்திகளுக்கு பிறகு முதல் முறையாக யாஹூவும் மைக்ரொசொப்டும் தேடல் தொழில்நுட்பத்தில் இணைந்து செயட்பட உள்ளதாக அறிவித்துள்ளன
மேலும்
Wednesday, July 29, 2009
வணங்காமண் நிவாரண பொருட்கள் ஏலத்திற்கு செல்லாது? - இந்திய வெளியுறவுத்துறை தலையீடு
இதனால், நாளை ஏலம் விடுவதிலிருந்து வணங்காமண் நிவாரணப் பொருட்கள் காப்பாற்றப்பட்டுள்ளது.
ஜெயலலிதா அவசர முடிவு - அனிதா , ஜெயலலிதாவுக்கு நன்றி - SV.சேகர்
தொடர்ந்து வாசிக்க
தென் மாகாணசபை அடுத்த வாரம் கலைக்கப்படுகிறது - தேர்தல் வேட்டையில் அடுத்த குறி?
யாழ், வவுனியா உள்ளூராட்சி தேர்தலுக்கான மும்முரமான பணிகளில் ஈடுபட்டு வரும் சிறிலங்கா அரசு, ஊவா மாகாண சபை தேர்தலையும் விரைவாக நடத்து முடிக்க திட்டமிட்டுருந்தது யாவரும் அறிந்ததே.
இந்நிலையில் தென் மாகாண சபை அடுத்த வாரம் கலைக்கப்படவிருப்பதாகவும், ஆகஸ்ட் மாதம் முதல் வாரத்தில் இருந்து தென்மாகாண சபைக்கான தேர்தல் நடவடிக்கைகளை ஆரம்பிக்கவுள்ளதாக ஆளும் தரப்பு தெரிவித்துள்ளது.
தொடர்ந்து வாசிக்க
ஈராக்கில் கடத்தப்பட்ட மேலும் இரு பிரித்தானியார்களும் படுகொலை!
2007 ஆம் ஆண்டு, ஈராக்கில் வைத்து கடத்தப்பட்ட, பிரித்தானிய நபர்கள் 5 பேரில், படுகொலை செய்யப்பட்ட இரண்டு பேரின் சடலங்களை கடந்த மாதம் அனுப்பிவைத்த கடத்தல் காரர்கள், தற்போது மேலும் இரண்டு பேரையும் படுகொலை செய்துள்ளதாக, பக்தாத்தில் இருந்து அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியுள்ளன. அலன் மெக்ம்னெமி, அலெக் மெக்லச்சன் ஆகியோரே இவ்வாறு கொல்லபப்ட்டுளனர்.
சென்ற வாரம் இவர்களது உறவினர்கள் அளித்த பேட்டியிலும், 'இவர்களை காப்பாற்றிவிடலாம் என்ற நம்பிக்கையை இழந்துள்ளதாக' கூறியிருந்தனர்.
தொடர்ந்து வாசிக்க...
சிபிஜ அறிக்கையை கிழித்தெறிந்தார் மெஹ்பூபா
காஷ்மீர் சட்டசபையில் இன்றும் மூன்றாவது நாளாகவும் குழப்ப நிலை காணப்பட்டது. நேற்றைய தினம் சட்டப் பேரவையில் காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டைத் தொடர்ந்து, அவர் திடீரெனப் பதவி விலகுவதாக அறிவித்திருந்தார். உமர் அப்துல்லாவின் ராஜினாமாவை ஆளுநர் நிராகரித்திருந்தார்
தொடர்ந்து வாசிக்க
Tuesday, July 28, 2009
சர்வகட்சிக் குழுவின் தீர்வுத் திட்டத்தை குப்பைத் தொட்டியில் போடவேண்டும் - தே.தே. இயக்கம்
அமைச்சர் திஸ்ஸ விதாரணவின் தலைமையில் சர்வகட்சிக் குழுவினால் தயாரிக்கப்பட்ட தீர்வுத் திட்ட யோசனைகளை ஜனாதிபதி ஆராயாமல் குப்பைத் தொட்டியில் போட வேண்டுமென தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் தெரிவித்துள்ளது. தேசியப் பிரச்சினை தொடர்பிலான சர்வகட்சிக் குழுவினரின் யோசனைகளை அரசாங்கத்திடம் இந்த வாரம் கையளிக்கவுள்ளதாக அமைச்சர் திஸ்ஸ விதாரண அறிவித்துள்ளார்.
தொடர்ந்து வாசிக்க
உங்கள் இணையத்தளங்களின் 'Passwords' அபகரிக்கப்படலாம்! - எச்சரிக்கை
தொடர்ந்து வாசிக்க....
வடக்கில் 60 ஆயிரம் சிங்கள இராணுவ குடும்பங்களை குடியேற்ற சிறிலங்கா அரசு திட்டம்?
தமிழின உணர்வாளரும், இயக்குனருமான சீமான் கூறியது போன்று 'வடக்கில், இடம்பெயர்ந்த தமிழ் மக்களை மீள் குடியமர்த்தாது, அப்பிரதேசங்களில் சிங்கள குடியேற்றங்களை உருவாக்க சிறிலங்கா அரசு திட்டமிட்டுள்ளதாக அதிர்ச்சிக்குரிய தகவல்கள், அரச தரப்பில் இருந்தும் வெளியாகியிருக்கின்றன. யாழ், மன்னார் மற்றும் வன்னிப்பிரதேசங்களை கேந்திரமாக கொண்டு 60 ஆயிரம் இராணுவ குடும்பங்களை குடியமர்த்த சிறிலங்கா அரசு திட்டமிட்டுள்ளதாகவும், இதற்காக அந்ததந்த பிரதேசங்களில் சிங்கள பாடசாலைகள், மருத்துவமனைகள், மற்றும் விளையாட்டு மைதானங்கள் உள்ளிட்ட உட்கட்டமைப்பு வசதிகளை உருவாக்குவது குறித்தும் திட்டமிட்டு வருவதாக தகவல்கள் கசிந்துள்ளன.
தொடர்ந்து வாசிக்க....
Monday, July 27, 2009
தந்திரிமலையில் விடுதலை புலிகள் தாக்குதல்? - இரண்டு படையினர் பலி என்கிறது இராணுவ
தந்திரி மலை பிரதேசத்தில் உள்ள இராணுவ காவலரன்கள் மீது விடுதலைப்புலிகள் மேற்கொண்ட சம்பவம் ஒன்றில் இரண்டு ஊர்காவற் படையினர் கொல்லப்பட்டுள்ளதாகவும், இந்த சம்பவத்தை அடுத்து அங்கு நடைபெற்ற தேடுதலில் 15 மெலிபன் பிஸ்கட் பக்கெட்டுக்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்தாக்குதல் சம்பவம் இடம்பெற்ற போது, காவற்துறை கடமையில் 4 ஊர்காவற் படையினர் மற்றும் ஒரு காவற்துறை சிப்பாய் ஆகியோர் கடமையில் இருந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
தொடர்ந்து வாசிக்க..
சென்னையில் முன்னாள் இலங்கைத் துணைத்தூதுவர் வாகனத்தின் மீது தாக்குதல்
இலங்கைக்கான துணை தூதுவராய் இநத்தியாவிலிருந்த பணியாற்றிய அம்சாவின் கார் சென்னை ஜிம்கானா கேளிக்கை கிளப்பில் இன்று இந்திய நேரம் இரவு 10 மணியளவில் அடித்து நொறுக்கப்பட்டதாய் தமிழகத்திலிருந்து பிந்திக் கிடைத்த செய்திகள் தெரிவிக்கின்றன. அவரது கார் தாக்கப்பட்ட சமயத்தில், அம்சாவுடன், பத்திரிக்கையாளர் 'இந்து' ராமும் உடனிருந்தததாகவும் தெரிய வருகிறது.
தொடர்ந்து வாசிக்க
நல்லூர் கந்தன் கொடியேறியது
வரலாற்று சிறப்பும் சித்தர்களின் அருளலையும் நிறைந்த, யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி கோவில் வருடாந்த மகோற்சவத் திருவிழா இன்று திங்கட்கிழமை காலை 10:00 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது. கொடியேற்றத் திருவிழாவில், பெருந்திரளான பக்தர்கள் பக்திப் பரவசத்துடன்ட கலந்து கொண்டார்கள் என யாழ் செய்திகள் தெரிவிக்கின்றன.
தொடர்ந்து வாசிக்க
யாழ் தேர்தலை கண்காணிக்க இரு உள்நாட்டு குழுக்களுக்கு மாத்திரமே அனுமதி!
யாழ் மாவட்டத்தில் எதிர்வரும் மாதம் நடைபெறவிருக்கும் தேர்தலினைக் கண்காணிக்க பவ்ரல் மற்றும் தேர்தல் வன்முறைகளைக் கண்காணிப்பதற்கான குழு (சி.எம்.ஈ.பி) ஆகிய இரு உள்நாட்டுக் கண்காணிப்புக்குழுக்களுக்கு மாத்திரமே இம்முறை அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Saturday, July 25, 2009
ஹபிள் தொலைக்காட்டியின் முதல் படம் -வியாழனின் புதிய தழும்பு
மே மாதம் அட்லாண்டிஸ் விண்கலத்தில் சென்ற வீரர்களின் STS-125 குழுவால் பழுது பார்க்கப்பட்ட உலகின் மிகப் பெரிய விண் தொலைக்காட்டியான ஹபிள் வியாழக் கிரகத்தில் அடையாளம் காணப்படாத பொருள் ஒன்று சமீபத்தில் மோதியதால் ஏற்பட்ட புதிய மர்மத் தழும்பை பரிசோதனை முயற்சியாக வியாழனன்று (ஜூலை 23) படம் பிடித்திருக்கிறது.
மேலும் வாசிக்க...
ஜக்சனுக்கு 25 வயதில் இன்னுமொரு மகன்
மைக்கல் ஜக்சனுக்கு, 25 வயதில் இன்னுமொரு ஒரு மகன் இருப்பதாக தகவல்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ஏற்கனவே ஜக்சனின் இறப்பு பற்றிய சர்ச்சை தொடர்ந்தவாறு இருக்கும் இந்நிலையில், தற்போது இத்தகவலும் வெளி உலகுக்கு கசிந்துள்ளது. 1984 ஆம் ஆண்டு நோர்வே நாட்டிற்கு பயணம் மேற்கொண்ட ஜக்சன் அங்கு விடுதி ஒன்றில் தங்கியிருந்த போது தன்னுடன் உறவு வைத்துக்கொண்டதில் ஒரு மகன் இருப்பதாகவும், அவருடைய பெயர் ஒமர் பட்டி எனவும் கூறுகிறார் 'பியா' என்ற பெண்மணி.
தொடர்ந்து வாசிக்க....
Friday, July 24, 2009
வன்னி முகாம்கள் திறந்தவெளிச் சிறைக் கூடங்களே - Tehelka
கடந்த மே மாத நடுப்பகுதியில், வன்னிச் சமர்க்களத்திலிருந்து, சிறிலங்கா அரச படைகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வந்து சேர்ந்த தமிழ் மக்கள் தங்க வைக்கப்பட்ருக்கும் முகாம்கள் குறித்தும். அங்குள்ள மக்களின் நிலை குறித்தும், சிறிலங்கா அரசும், அது சார்ந்த ஊடகங்களும், திருப்திகரமான செய்திகளை வெளியிட்டு வருகின்ற போதும், அரசு சாரா ஊடகங்களும், வெளிநாட்டு ஊடகங்களும், இம் முகாம்களில் வதியும்,சுமார் மூன்று இலட்சம் மக்களின் நிலைகுறித்து அதிருப்பிகரமாகவே செய்திகள் தருகின்றன.
மேலும் வாசிக்க....
உண்மைகள் உறங்காது !
வணக்கம் நண்பர்களே!
தமிழ் ஊடகங்கள் இன்று எதிர் கொள்ளும் அச்சுறுத்தல்கள் என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை. உண்மையான செய்திகளைச் சேகரித்துத் தருவதில் 4தமிழ்மீடியா குழுமம் மிகுந்த கவனத்துடனேயே செயற்பட்டு வருகிறது. யார் மீதும் வீண் பழி சுமத்தும் நோக்கமும் எமக்கில்லை.மிகக்குறுகிய காலத்தில் தனித்துவமான செய்தித் தளமாக தமிழ்வாசகர்களின் உள்ளங்களில் இடம்பிடித்துக்கொள்ளவும் இவையே காரணம்.
கருத்துக்களைக் கருத்துக்களால் எதிர் கொள்ளத் திராணியற்று, கயமைச் செயற்பாடுகளால் எங்கள் செய்திச் சேவையை முடக்கும் முயற்சிகள் மூன்றாவது தடவையாக நடத்தப்பட்டிருக்கிறது.தொடந்து வாசிக்க
முகாம்களில் தொடரும் மூளைக்காய்ச்சல் தொற்று - 14 நாட்களில் 14 பேர் பாதிப்பு
இலங்கையில் மோதல் காரணமாக இடம்பெயர்ந்து இடைத்தங்கல் முகாம்களில் தங்கியுள்ளவர்கள் கடும் சுகாதாரக்கேடுகளின் காரணமாக பாரிய நோய்கள் பீடிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து வாசிக்க
Thursday, July 23, 2009
பின்லேடன் மகன் அமெரிக்க படைகளின் தாக்குதலில் பலி ?
அல் கொய்தா அமைப்பின் தலைவர் ஒசாமா பின்லேடனின் இளைய மகன், அமெரிக்கப்படைகள் நடாத்திய விமானத் தாக்குதலில் கொல்லப்பட்டிருக்கலாம் என ஊகம் தெரிவித்து செய்திகள் வெளியாகியுள்ளன. பின்லேடனின் மூன்றாவது மகனாகிய சாத் பின்லேடனே இவ்வாறு கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
தொடர்ந்து வாசிக்க
கருணா தமிழ் மக்களுக்கு துரோகமிழைத்தார் - கருணாவின் மனைவி பேட்டி
தமிழ் மக்களின் தலைவராக கருணா எவ்வாறு உருவாகினார் என்பதை அடியோடு அவர் மறந்துவிட்டதாக கருணாவின் மனைவி குற்றம் சாட்டியுள்ளார். ஆங்கில இணையத்தளமொன்றுக்கு அவர் அளித்த பேட்டியின் ஒரு சில பகுதிகள் குளோபல் தமிழ் செய்திகளால் மொழியாக்கம் செய்யபட்டு வெளியிடப்பட்டுள்ளது
தொடர்ந்து வாசிக்க
Wednesday, July 22, 2009
தல தல தலைவர்..!
உங்களுக்குக் கிடைத்திருக்கும் இந்தப் புகழ், இந்த வாழ்க்கை பற்றி நீங்கள் எப்போதாவது எண்ணியதுண்டா என ஒரு செவ்வியில் செய்தியாளர் கேட்ட போது, " இல்லை. ஓரு போதும் இல்லை. இப்படியொரு வாழ்க்கையை நான் கற்பனை பண்ணிப் பார்த்தது கூட இல்லை.." என வெளிப்படையாகப் பதில் சொன்னவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்.
தொடர
கிரஹணம் தெரிந்தது, இட்லி வந்தது, டால்பின்கள் குதித்தன, சுனாமி வரவில்லை
இந்த நூற்றாண்டின் மிக நீண்ட சூரிய கிரகணம் எனும் பெருமையோடு இன்று ஆசிய நாடுகளில் சூரிய கிரஹணம் அதிகளவு தெரிந்தது. உலகெங்கனும், ஆய்வாளர்களும், மக்களும், எதிர்பார்த்துக் காத்திருந்த இச் சசூரிய கிரஹணத்துடன், மேலும் சில சுவையான சம்பவங்களும் நிகழ்ந்துள்ளன. இந்தியாவில் முழுமையாகத் தெரியும் எனக் கருதப்பட்ட கிரஹணம், பெரும்பாலான பகுதிகளில் முழுமையாகத் தெரியவில்லை.
தொடர்ந்து வாசிக்க
புதிய கட்டமைப்பில் புலிகள் எழுச்சி!
தமிழீழ விடுதலைப்புலிகளின் நிர்வாக கட்டமைப்பு மீள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதாகவும், புதிய நிர்வாக செயற்குழுவால் எடுக்கப்பட்ட கூட்டு முடிவால், இனி வரும் காலத்தில் தேசிய தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் சிந்தனைகளுக்கு அமைவாக, அனைத்து போராட்ட நகர்வுகளையும் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் அனைத்துலக உறவுகளுக்கான
தொடர்ந்து வாசிக்க
யாழ்ப்பாணம் தீவுப்பகுதியில் கரையொதுங்கும் சடலங்கள் தமிழக மீனவர்களதா..?
கடந்த மூன்று தினங்களுக்குள் யாழ்ப்பாணம் புங்குடுதீவுக் கடற்கரையில் நான்கு பேரின் சடலங்கள் கரையொதுங்கியுள்ளதாக யாழ் பொலிஸார் தெரிவித்துள்ளனர். உருக்குலைந்த நிலையிலுள்ள இந்தச் சடலங்கள் பொலிஸாரினால் மீட்கப்பட்டு யாழ் போதனா வைத்தியசாலையிலுள்ள சவச்சாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இவ்வாறு கரையொதுங்கியுள்ள சடலங்கள் தமிழக மீனவர்களுடையதா எனும் சந்தேகமும் எழுந்துள்ளதாகத் தெரிய வருகிறது.
தொடர்ந்து வாசிக்க
Saturday, July 18, 2009
போலீஸா வாராரு சிங்கம் சூர்யா?
போலீஸா வாராரு சிங்கம் சூர்யா
'சிங்கம்' ஹரி இயக்கத்தில் சூர்யா நடிக்கும் புதிய படம் என்பது பழசாப்போச்சு. இப்போ வந்திருக்கிற தகவல், இந்த படத்திலும் சூர்யா பொலிஸ் அதிகாரியாக நடிக்கிறாராம். ஆனா கிராமத்து மனுஷனாவும், மொடர்னா நகரத்து ஆளாவும் ரெண்டு கெட்டப் செய்யுறாராம்.
வாரணம் ஆயிரம் படத்தில், இராணுவ அதிகாரியா நடிக்கிறதுக்காக சிக்ஸ் பக் போட்ட சூர்யா தொடர்ந்து 'அயன்' திரைப்படத்திலும் அதை தக்க வச்சிருந்தாரு. ஆனா முன்னர் போல கடுமையா பயிற்சி செய்யாததால, 'சிங்கம்' படத்துக்காக திருப்பி கொஞ்சம் வெயிட் போட சொல்லியிருக்காரு ஹரி.
ஆதனால பழைய உடம்பை
Friday, July 17, 2009
சந்திரனுக்கு செல்லும் அடுத்த மனிதனை அனுப்ப இஸ்ரோ திட்டம்?
இந்தியாவின் தேசிய விண்வெளி ஆராய்ச்சி நிலையமான இஸ்ரோ, கடந்த வருடம் (2008) சட்டிஷ் தவான் ஏவுதளத்திலிருந்து இன்பfரா ரெட் கதிர்கள் (NIR) மூலம் சந்திர மேற்பரப்பை முப்பரிமாண தோற்றத்தில் படம் பிடிப்பதற்கு
(படம் - இந்தியாவின் முதல் ராக்கெட்)
'சந்திராயன் 1' எனும் செய்மதியை ஏவியிருந்தது.
அதன் பின் உலகளாவிய ரீதியில் முடுக்கப்பட்ட சந்திர ஆய்வுகள் நாசாவின் 1968 ம் ஆண்டு அப்பலோ மிஸ்ஸன் முழுமையாக ஒரு நாடகம் என இக்காலத்தில் பரவியுள்ள கட்டுக்கதைகளையும் தகர்த்தெறிந்து வருகின்றன என்று தான் சொல்ல வேண்டும்.மேலும் வாசிக்க...
Wednesday, July 15, 2009
தமிழின படுகொலைகளுக்கு ஐ.நாவும் காரணமா? - நிராகரிக்கிறார் பான் கி மூன்
சிறிலங்காவில் நடைபெற்ற இறுதிக்கட்ட போர் நடவடிக்கைகளில் பெருமளவு உயிரிழப்புக்கள் ஏற்பட ஐ.நாவும் ஒரு காரணம் என முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்களை பான் கீ மூன் மீண்டு நிராகரித்துள்ளார்.அண்மையில் நியூயோர்க்கில் வைத்து, பான் கீ மூனிடம் 'Wall Street' பத்திரிகை மேற்கொண்ட ஒரு செவ்வியின் போது இவ்வாறு கேள்வி எழுப்பியது.
கேள்வி - 'சிறிலங்கா இராணுவத்தினர், விடுதலைப்புலிகளுக்கு எதிராக மேற்கொண்ட போர் நடவடிக்கைகளில் பெருமளவு பொதுமக்கள் உயிரிழப்புக்கள் ஏற்படலாம் என தெரிந்திருந்தும், ஐ.நா அதனை அலட்சியம் செய்ததாக குற்றம் சாட்டப்படுகிறதே? சிறிலங்காவுக்கு நீங்கள் விஜயம் மேற்கொண்ட காலத்தை அடிப்படையாக கொண்டு, அனைத்தும் முடிவடைந்த பின்னரே நீங்கள் அங்கு சென்றதாக கூறப்படுகிறதே?
இதற்கு பொறுப்பாளியாக்க கூடாது. இது முழுமையாக சரியானதல்ல.
தொடரும் விமான விபத்துக்கள் - ஈரான் விமானமும் நொறுங்கி வீழ்ந்தது - 168 பேர் பலி
ஈரானின் காஸ்பியன் எயர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான பயணிகள் விமானம் ஒன்று நடுவானில் வைத்து திடீரென நொறுங்கி வீழந்ததனால், பயணித்த 168 பேரும் கொல்லப்பட்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இரு மாதங்களுக்குள் ஏற்பட்ட மூன்றாவது மிகப்பெரிய விமான விபத்து இதுவென்பதால், அடிக்கடி வெளிநாடுகள் சென்று வரும் சுற்றுலா பயணிகள் கடும் அச்சத்துக்குள்ளாகி இருக்கின்றனர்.
தொடர்ந்து வாசிக்க...
இந்திய பிரதமருக்கு பிரான்ஸில் கிடைத்த கௌரவம்
ஜீ 8, ஜீ 5 மாநாடுகளை முடித்துக்கொண்டு, எகிப்தில் நடைபெறுகின்ற 15 வது அணிசேரா நாடுகளின் மாநாட்டில் கலந்து கொள்ள முன்னர், பிரான்ஸின் குடியரசு தின விழாவில் அதியுயர் சிறப்பு விருந்தினராக இந்திய பிரதமர் மன்மோகன் சிங் கலந்துகொண்டார். கடந்த ஆண்டு டில்லியில் நடைபெற்ற குடியரசு தின விழாவில், பிரான்ஸ் அதிபர் சர்கோஸி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். அதனால் இந்திய பிரதமரை, இம்முறை பிரான்ஸ் குடியரசு தின விழாவில் கலந்துகொள்ளுமாறு அழைப்பு விடுத்தார்
தொடர்ந்து வாசிக்க...
மூதூர் படுகொலைகளுக்கும், இராணுவத்துக்கும் தொடர்பில்லையாம்?
மூதூர் தொண்டு நிறுவனப்பணியாளர்கள் படுகொலை செய்யபப்ட்ட சம்பவத்துடன், தொடர்புடைய முழுமையான விசாரணை அறிக்கையை ஜனாதிபதி ஆணைக்குழு வெளியிட்டுள்ளது. இதில் இப்படுகொலை சம்ப்வத்துக்கும், சிறிலங்கா இராணுவம் மற்றும் கடற்படையினருக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2007 ஆகஸ்ட் 4 ம் திகதி, மூதூரில் இயங்கி வந்த அக்க்ஷன் எகென்ஸ்ட் ஹங்கர் (Action Again Hunger) என்ற சர்வதேச தொண்டு நிறுவனத்தின் 17 பணியாளர்கள் படுகொலை செய்யப்பட்டனர். சம்பவ தினத்தன்று மூதூர் மற்றும் அதனை சூழவுள்ல பகுதிகள் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டிலேயே இருந்ததாகவும், அன்றைய தினம் காலையில் விடுதலைப்புலிகள்
தொடர்ந்து வாசிக்க...
Tuesday, July 14, 2009
180 நாட்களில் மீளக் குடியேற்றுவதாக வாக்குறுதி அளிக்கவில்லை? - மகிந்த ராஜபக்ச
இடம்பெயர்ந்த மக்களை மீளக்குடியேற்றுவதற்கு எம்மிடம் உள்ள, 180 நாள் திட்டமானது இலக்கு மாத்திரமே, வாக்குறிதி அல்ல என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.அமெரிக்காவின் 'ரைம்' சஞ்சிகைக்கு அளித்த பேட்டி ஒன்றின் போதே, ராஜபச்க இதனை தெரிவித்தார். இச்செவ்வியில் அவர் மேலும் தெரிவித்ததாவது
பிரபாகரனை நான் நேரில் பார்த்ததில்லை. அவர் சுடப்பட்டார் என்பது எமக்கு தெரியும். அவர் எப்படி சுடப்பட்டார் என்பது குறித்து நான் ஆர்வம் காட்டவில்லை. ஆனால் அவரை நேரில் சந்தித்திருந்தால் ஏன் இந்த பைத்தியக்காரத்தனம் என கேட்டிருப்பேன். இதை விட நான் வேறு என்ன அவரிடம் கேட்க முடியும்?
தொடர்ந்து வாசிக்க...
Monday, July 13, 2009
நாடகங்களில் ஜொலிக்கவுள்ள டொலிவூட் நட்சத்திரங்கள் - ரஜினிகாந்தும் கலந்துகொள்கிறார்
தென்னிந்தியாவின் பிரபல டொடலிவூட் நட்சத்திரங்கள் கலந்து கொள்ளும் நாடகங்கள் வரும் ஆகஸ்ட் 15 ஆம் திகதியில் இருந்து 23 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. சென்னை முழுவதும், சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள இம்மேடை நாடககங்களை, தென்னிந்திய நடிகர் சங்கம் ஏற்பாடு செய்துள்ளது. நேற்று நடைபெற்ற தென்னிந்திய நடிகர் சங்கத்தின் சிறப்பு பேரவை கூட்டத்திலேயே நடிகர் சங்கத்தலைவர் சரத்குமார் இந்த தகவலை கூறினார்.
தொடர்ந்து வாசிக்க..
'லங்கா நியூஸ்' க்கு தடை - பிரபாகரன், ராஜபக்ச மகன்களது செய்தியால் கொதிப்படைந்தது அரசு
சிறிலங்கா அரசாங்கத்தின், ஊடகங்கள் மீதான ஒடுக்குமுறை சம்பவங்கள் அதிகரித்து வருவதற்கு மற்றுமொரு சன்றாக, மற்றுமொரு இணையத்தளமும், நாடுமுழுவதும் உபயோகிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே தமிழர்கள் மீதான ஒடுக்குமுறைகளையும், இனக்குரோதங்களையும் வெளிச்சத்திற்கு கொண்டு வர முயற்சித்திருந்த 'தமிழ் நெட்' இணையத்தளத்தை பார்வையிட உள்நாட்டில் தடைவிதிக்கப்பட்டிருந்தது.
தொடர்ந்து வாசிக்க....
முகாம்களை பார்வையிட உறவினர்களுக்கே அனுமதியில்லை - இந்திய தூதுவக்குழுவுக்கு?
இந்தியாவின், ஆக்ரமிப்பு சிறிலங்காவில் அதிகரித்து வருவதாகவும், வடபகுதி வளங்களை சூறையாடுவதற்கும், அரசியல் ஆதிக்கத்தை நிலைநாட்டுவதற்கும் இந்தியா மேற்கொண்டு வரும் முயற்சியின் உச்சகட்டமே சிறிலங்காவுக்கான இந்திய தூதுவரின் யாழ் விஜயமாகும் என ஜே.வி.பி தலைவர் சோமவன்ச அமரசிங்க கூறியுள்ளார். இதனால், இதனை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், இல்லையேன் நாட்டில் எதிர்காலம் பயங்கரமான நிலைக்கு தள்ளப்படும் எனவும் இதற்கெதிராக வீதிகளில் இறங்கி ஜனநாயக முறைகளில் போராடப்போவாதகவும் எச்சரித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் கூறியதாவது :
தொடர்ந்து வாசிக்க
Saturday, July 11, 2009
மெனிக் பாம் முகாமுக்கு சென்ற மஹிந்தவின் புதல்வருக்கு சேற்றடி? - ஒளிப்படச்சுருள்கள் பறிப்பு!
வவுனியா மெனிக் பாம் இடம்பெயர்ந்தோர் முகாமுக்கு, சிறிலங்கா அரச பிரமுகர்கள் நேரில் சென்று பார்வையிடுவது அதிகரித்துள்ளது.குறிப்பாக சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபஜ்சவுக்கு மிக நெருங்கியவர்களும், அரசில் முக்கிய பதவிகளில் அங்கம் வகிப்பவர்களும் உத்தியோக பூர்வமற்ற முறையில் இம்முகாம்களுக்கு சென்று, மக்களுக்கு தேவையான வசதிகளை நேரடியாக செய்து கொடுப்பதாக, உள்நாட்டு ஊடங்களில் ஒளிப்பதிவுக்காட்சிகளுடன் செய்திகள் அடிக்கடி வலம்வரத்தொடங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சர்வதேச ஊடகங்களுக்கும், பக்கசார்பற்ற ஊடகங்களுக்கும், இடைத்தங்கல் முகாம்களுக்கு செல்லும் வாய்ப்பு இன்னமும் மறுக்கபப்டும் நிலையில், அரச பிரமுகர்கள் செல்லும் போது மட்டும், அவர்களுக்கு சார்பான ஊடகங்கள் இம்முகாம்களுக்குள் அனுமதிக்கப்படுவது ஏன் என்ற கேள்வி ஒருபுறம் எழுகிறது.
இந்நிலையில், மெனிக் பாம் முகாமிற்கு மகிந்த ராஜபக்சவின் மூத்த புதல்வர் நாமல் ராஜபக்சவும் அடிக்கடி சென்று
தொடர்ந்து வாசிக்க..
Thursday, July 9, 2009
பர்கர் கிங் சாண்ட்விச் இறைச்சியில், இந்துக்கடவுள் லக்ஷ்மியின் உருவப்படம்
அமெரிக்காவின் துரித உணவு தயாரிப்பு நிறுவனங்களில் பிரபல்யமான 'பர்கர் கிங்' தனது இறைச்சி சாண்ட்விஸ் பக்கெட்டுக்களுக்கு, இந்துக்களின் கடவுளான லட்சுமிதேவியின் உருவப்படத்தினை பொரித்து விளம்பரப்படுத்தியிருந்த போஸ்டர்ஸ்கள் ஸ்பெயின் நாட்டில் வெளியிடப்பட்டன. இவற்றினால் அதிர்ச்சியடைந்த இந்துக்கள், கடும் கண்டனம் வெளியிட்டதை தொடர்ந்து, அவ்விளம்பரம்
தொடர்ந்து வாசிக்க...
65 பேரின் உயிரைக்குடித்த கள்ளச்சாராயம் - அகமபாத்தில் தொடர்கிறது பதற்றம்
குஜராத் மாநிலம் அகமபாத் அருகே மஜூர்காம் பகுதியில் கடந்த் இருதினங்களுக்கு முன்பு விஷச்சாராயம் குடித்ததில் 7 பேர் உயிரிழந்ததுடன், கடந்த ஞாயிற்றுக்கிழமை 25 பேர் பலியாகினர். உயிருக்கு ஆபத்தான நிலையில் பலர் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டனர். ஆனால் தற்போது அடுத்தடுத்து பலரின் உடல்நிலை பாதிக்கபப்ட்டதில், நேற்று இரவு 17 பேர் மரணம் அடைந்தனர்.
இதன் மூலம் விஷச்சாராயத்துக்கு பலியானோர் தொகை 65 ஆக உயர்ந்துள்ளது.
தொடர்ந்து வாசிக்க...
தமிழ் மக்கள் உயிரிழப்புக்கள் பொய்யானவை - தடுத்து வைக்கப்பட்ட வன்னி வைத்தியர்கள்
விடுதலைப்புலிகளின் கடுமையான அழுத்தங்களாலேயே தமிழ் மக்கள் உயிரிழப்புக்கள் பற்றிய பொய்யான தகவல்களை வழங்கியதாக, யுத்த வலயத்தில் கடமையாற்றிய வன்னி வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
இரண்டு மாதகாலமாக குற்றப்புலனாய்வு பிரிவினரால் தடுத்து வைக்கப்பட்ட பின்னர் இன்று தேசிய பாதுகாப்பிற்கான ஊடக மத்திய நிலையத்தில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றிய வன்னி மருத்துவர்கள் இளஞ்செழியன், சண்முகராஜா, சத்தியமூர்த்தி, சிவபாலன், வரதராஜன் ஆகியோர் பாதுகாப்பு தரப்பினரின் கண்காணிப்பிற்கும், பிரசன்னத்திற்கும் மத்தியில் கருத்து வெளியிட்ட போதே இதனை கூறியுள்ளனர்.
விடுதலை புலிகளின் அழுத்தங்களுக்கு மத்தியில் பணியாற்ற நேர்ந்ததாகவும், அவர்கள் தந்த விபரங்களையே கூறியதாகவும் கூறும் நீங்கள் இராணுவத்தின் அழுத்தங்களுக்கு மத்தியில் தற்போது கருத்து வெளியிடுகின்றீர்கள். இதில் எந்தளவிற்கு உண்மை தன்மை காணப்படுகிறது என ஊடகவியலாளர்
Wednesday, July 8, 2009
மேற்கு சீனாவில் தொடரும் பதற்றம் - ஜீ8 மாநாட்டில் கலந்து கொள்ளாமலே நாடு திரும்புகிறார் சீன அதிபர்
ஜீ8 நாடுகளின் மாநாட்டிற்காக இத்தாலி சென்றிருந்த சீன அதிபர் ஹு ஜிண்டோ, மாநாட்டில் கலந்து கொள்ளாமலேயே மீண்டும் பீஜிங் திரும்பியுள்ளார்.
மேற்கு சீனாவில் உய்குர் பழங்குடி முஸ்லீம் இனத்தவருக்கும், ஹான் இன சீனர்களுக்கும் இடையில் கிளர்ந்தெழுந்த இனமோதல் 154 உயிர்களை குடித்தும் இன்னும் அடங்காமல் பலிதீர்த்துக்கொள்ளும் வெறியில் கையில் ஆயுதங்களுடன், ஷிங்ஜியாங் மாநகரம் முழுவதும் திரிந்துகொண்டிருப்பதே, சீனப்பிரதமரின் திடீர் மீள் வருகைக்கு காரணம்.நேற்றிரவு தொடர்ந்த ஊரடங்கு சட்டம், அதிகாலை வீதிகளில் போடப்பட்டிருந்த பெரும் காவற்துறை குவிப்பு போன்றவற்றினால் ஷிங்ஜியாங் தலைநகர்
தொடர்ந்து வாசிக்க....
ஜக்சனின் இறுதி நினைவாஞ்சலி
பொப் இசையின் முடிசூடா மன்னனாக திகழ்ந்த மைக்கல் ஜக்சனின் இறுதிப்பிரியாவிடை, கோடிக்கணக்கான மக்கள் அஞ்சலியுடன் நேற்று நடைபெற்றது.கடந்த மாதம் 25 ஆம் திகதி மாரடைப்பால் மரணமடைந்த, ஜக்சனின் உடலும் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நல்லடக்கம் செய்யப்பட்டது. லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள ஸ்டேபில்ஸ் விளையாட்டு அரங்கம், மற்றும் ஒளிப்படக்கூடத்தில் நடந்த இறுதி நினைவஞ்சலியில் சுமார் 26,000 ரசிகர்கள் கலந்து கொண்டதுடன், ஏராளமான மக்கள் கூட்டம் கூட்டமாக நினைவஞ்சலி நடந்த மையத்திற்கு வெளியேயும் காத்திருந்தனர்.
இனையத்தளம் மூலம் முதலில் தேர்வு செய்யப்பட்ட 8,500 பேருக்கும், விரும்பிய இன்னொரு ரசிகரையும் கூட்டிவர அனுமதி வழங்கப்பட்டது, ரசிகர்களிடையே பெரும் ஆரவாரத்தை
தொடர்ந்து வாசிக்க....
Tuesday, July 7, 2009
'MJ, I want u back' என்பவர்களுக்காக - மறுபடி ஜக்சன்
மைக்கல் ஜக்சன் இறந்து விட்டதை இன்று வரை நம்ப மறுக்கும் எங்களில் ஒருவரே எத்தனை பேர் உள்ளோம். அவர் எம்முடன் தான் இருக்கிறார்கள். நான் ஆடிக்கொண்டிருக்கும் ஒவ்வொரு நடன அசைவிலும் உயிர் கலந்துள்ளது போல உணர்கிறேன் என்கிறார்கள் அவர் வளர்த்தெடுத்த ஜக்சன்கள். மீண்டும் ஒரே ஒரு முறை எம் கண்கள் முன் நிஜமாக தோன்ற மாட்டாரா? என ஏங்கித்தவிக்கிறது இசையுலகம்.
தோன்றியிருக்கிறார் என நிரூபிக்கிறது ஒரு ஒளிப்படக்காட்சி. பிபிசியின் பிரபல செய்தியாளரான லரி கிங்ஸ், மைக்கல் ஜக்சனின் சகோதரரான ஜெரமி ஜக்சனிடம் செவ்வி ஒன்றினை எடுத்துக்கொண்டிருக்கிரார். அப்போது
தொடர்ந்து வாசிக்க...
ஜக்சன் மண்ணில் - ரசிகர்கள் கண்ணீரில்
பொப் இசையுலகின் சக்கரவர்த்தி மைக்கல் ஜக்சனின் உடல் இன்று (செவ்வாய்க்கிழமை) அடக்கம் செய்யப்படுகிறது. இதற்கு முன்னர் அவரது உடல் இரு முறை பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது. ஜாக்சன் போதை மருந்து உபயோகித்தரா என்பதை அறியவே இப்பரிசோதனை இடம்பெற்றது.
ஜக்சனின் இறுதிச்சடங்குள் நடாத்துவதற்கு தாமதம் அடைந்ததற்கும், இதுவே காரணம். இந்நிலையில் ஜக்சனின் மூளை மட்டும் தடவியல் பிரிவினர், மூளை நரம்பியல் நோய் ஆய்வு நிபுணர்களால் பரிசோதிக்கப்பட்டு வந்தது. அவர் கடந்த காலத்தில் ஏதும் வேறு நோயால் பாதிக்கப்பட்டிருந்தாரா அல்லது, போதை மருந்துகளேதும் உபயோகித்தாரா என்பதனை கண்டறியவே இவருடைய மூளை பிரத்தியேகமாக பரிசோதிக்கப்பட்டது.
தொடர்ந்து வாசிக்க...
ஜீ8 மாநாடு இத்தாலியில் - எதிர்ப்பு உலகெங்கும்
ஜீ8 மாநாட்டிற்கு, சுற்றுச்சூழல் பாதுகாப்பாளர்களிடமும், இயற்கையை ஆர்வலர்களிடமும் மத்தியில் கடும் எதிர்ப்பு நிலவி வருகிறது.பசுமை சமாதானத்தை (Greanpeace), விரும்பும் ஆர்வலர்கள், பிரான்ஸ் ஈபிள் கோபிரத்திற்கு முன்னாள், உள்ள சிய்னி நதிக்கரையில் 16 மீற்றர் அளவை கொண்ட காற்று நிரப்பப்பட்ட, மிதக்கும் பெரிய பனிப்பாறை வடிவிலான பலூன் ஒன்றை உருவாக்கி, பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றனர். காலநிலை மாற்றம் கொண்டு வரும் பின் விளைவுகளை தடுக்க, ஜீ8 நாடுகள் தவறிவருவதாக குற்றம் சாட்டியே, இக்கவனயீர்ப்பை நிகழ்த்திவருகின்றனர்.
தொடர்ந்து வாசிக்க..
Monday, July 6, 2009
வவுனியா முகாம்களில் பணி புரிந்த 132 வைத்தியர்கள் திடீர் விலகல்?
வவுனியா இடைத்தங்கல் முகாம்களில் தங்கி மக்களுக்கு சேவை அளித்து வந்த 132 வைத்தியர்கள் தமது சேவைகளில் இருந்து திடீரென விலகிக்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த வியாழக்கிழமை நண்பகலில் இருந்து, இவ்வைத்தியர்கள் தமது பணிகளை விட்டு விலத்தொடங்கியுள்ளதால், வவுனியா முகாம்களில் உள்ள சுமார் இரண்டரை இலட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
தொடர்ந்து வாசிக்க..
சீனாவின் ஷிங்ஜியாங் பிரதேசத்தில் இனமோதல் - 140 பேர் பலி, 828 பேர் படுகாயம்
சீனாவின் ஷிங்ஜியாங் பிரதேசத்தின் தலைநகர் உரும்குயில், நேற்று இரவு சீன முஸ்லீம் இனத்தவருக்கும், சீனர்களுக்கும் இடையே ஏற்பட்ட பயங்கர கலவரத்தில் 140 உயிரிழந்துள்ளதுடன் 828 பேர் படுகயாமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சீனாவின் வடமேற்கு பகுதியில் உரும்கி என்ற பகுதியில் முஸ்லீம்களான உயிகுர் இனத்தவரின் மத சுதந்திரத்தை சீனர்கள் கட்டுப்படுத்துவதால் எப்போதும் அந்த பிராந்தியம் மோதல்களுடனேயே இருக்கும் என தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலையியேலே, சீனர்களின் ஹான் பிரிவினருக்கும், இம் உயிகுர் இனத்தவருக்கும் இடையே நேற்று பூதாகரமாக கலவரம் வெடித்துள்ளது.
தொடர்ந்து வாசிக்க..