Monday, August 31, 2009
திஸ்ஸநாயகம் தண்டனைக்கு அமெரிக்கா கடும் எதிர்ப்பும் - அதியுயர்'பீற்றர் மார்க்கர் விருதும்'
கடந்த ஒரு வடுட காலமாக தடுத்து வைக்கப்பட்டு, ஓரிரு நாட்களுக்கு முன்பு, 20 வருட கடூழிய சிறைத்தண்டனை வழங்கப்பட்ட, ஊடகவியலாளரும், பத்திரிகை ஆசிரியருமான ஜே.எஸ். திஸ்ஸநாயகத்திற்கு, ஊடக ஒழுக்கவியல் மற்றும் அர்ப்பணிப்புக்கான, அதியுயர் 'பீற்றர் மார்க்கர்' விருதினை வழங்கி கௌரவப்படுத்தியிருக்கிறது, உலக ஊடக அமையமும், அமெரிக்க எல்லைகள் அற்ற ஊடகவியலாளர் அமைப்பும்.
இதேவேளை, திஸ்ஸநாயகத்திற்கு 20 வருட கடூழிய சிறைத்தண்டனை கிடைக்கப்பெற்றதையிட்டு அமெரிக்கா கடும்
தொடர்ந்து வாசிக்க...
சசிகுமார், விக்ரம் இருவரினதும் புதிய திரைப்படங்கள்!
நாடோடிகள் கதாநாயகி அனன்யா, இந்த படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார். படத்தின் ஹீரோதான் வித்தியாசம். 54 வயது அவருக்கு. அதுடாங்க, பசங்க, நாடோடிகள் திரைபப்டங்களில் நடித்த ஜெய்பிரகாஷ் தான், இந்த படத்தோட ஹீரோ. (குறிப்பா டக்குனு உங்களுக்கு ஞாபகம் வரணும்னா, பசங்க திரைப்படத்தில் சொக்கலிங்க வாத்தியாரா வந்து, மகனுக்காக, சிகரட் குடிக்கிறத நிறுத்திடுவாரே. அவரே தான்)
ஊடகவியலாளர் திஸ்ஸநாயகத்திற்கு 20 வருட கடூழிய சிறைத்தண்டனை - உயர் நீதிமன்றம்!
பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த சிறிலங்காவின் சிரேஷ்ட்ட ஊடகவியலாளர் ஜே.எஸ். திசநாயகத்தின் வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது மேல் நீதிமன்றம் அவருக்கு 20 வருட சிறைத்தண்டனை விதித்துத் தீர்ப்பு வழங்கியுள்ளது.
நேற்றைய தினம் இவ்வழக்கு நீதிமன்றத்திற்கு முன் வந்த போது, அங்கு குழுமியிருந்த ஊடகவியலாளர்கள் திஸ்ஸநாயகத்தை விடுவிக்க கோரி உயர் நீதிமன்ற முன்றலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசுக்கு ஆதரவு வழங்கும் - இரா.சம்பந்தன்
தமிழ் மக்களின் நியாயபூர்வ அபிலாசைகள், சுயகௌரவம் பாதுகாக்கப்படும் வகையில் தீர்வினை முன்வைக்க அரசு முனையுமானால் அதற்கு பூரண ஒத்துழைப்பு வழங்குவதற்கு தாம் பின்னிற்கப் போவதில்லை என்று தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
தொடர்ந்து வாசிக்க
Sunday, August 30, 2009
Gmail Tab ஐ நிரந்தரமாக Firefox இல் திறக்க வைப்பது எப்படி?
Gmail விண்டோவை எந்த நேரமும் திறந்தே வைத்திருப்பதே அதிகமானவர்களின் விருப்பமாகும். ஆனால் அது Home page ஆகவோ அல்லது வேறு ஒரு விண்டோவில் திறந்து வைத்து அதை அடிக்கடி பார்த்துக் கொண்டிருப்பது போலவும் இருக்க கூடாது. என்ன செய்யலாம்? வழி உண்டு.
Saturday, August 29, 2009
முகாமிலுள்ள வி.புலிகள் மீது வழக்கு தொடருங்கள், அல்லது விடுதலை செய்யுங்கள் - அசோக் டி சில்வா
ஜே.ஏ.பிரான்ஸில் என்பவரினால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை மனித உரிமை மீறல் மனு குறீத்த விசாரணைகளின் போது, பிரதம நீதியரசர் அசோக டி சில்வா இவ்வாறு தெரிவித்துள்ளதுடன், அவர்களை நீண்ட காலம் தடுத்து வைப்பதில் அர்த்தமில்லை. அவர்கள் தொடர்பில் சட்டமா அதிபர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென தெரிவித்துள்ளார்.
தமிழீழ விடுதலைப்புலி உறுப்பினர்களை தொடர்ச்சியாக தடுத்து வைத்திருப்பதன் மூலம் பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளது. நீண்ட காலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள விடுதலைப்புலி உறுப்பினர்களிடம் விசாரணைகள் நடத்தப்பட்டிருந்தால் அவர்களை பிணையில் செல்ல அனுமதிக்க வேண்டும். என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து வாசிக்க...
போர்க்குற்றங்களை நிரூபிக்கும் மற்றுமொரு புகைப்பட ஆதாரம்!
தொடர்ந்து வாசிக்க....
சிறிலங்காவின் போர்க்குற்ற ஆவணத்திற்கு சர்வதேசத்தில் எழுந்துள்ள அழுத்தங்கள்!
இவ்வீடியோ பதிவு உண்மையெனில் ஆச்சரியப்படத்தேவையில்லை - எரிக் சொல்ஹெய்ம்
நோர்வே ஊடகங்களும் இவ்வீடியோ பதிவினை தனது தேசிய தொலைக்காட்சிகளில் வெளிப்படித்தியிருந்தது, இந்த வீடியோ காட்சி உண்மையாக இருந்தால் அது ஆச்சரியத்திற்கு உரியதல்ல.இறுதி ஆண்டுகளில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கொல்லபப்ட்டும் காணமல் போயுமுள்ளனர். இந்த கொலைகள் மற்றூம் காணாமல் போன சமொஅவங்கள் குறித்து எந்தவிதமான சட்ட நடவடிக்கைகளோ, நீதி விசாரணைகளோ நடத்தப்படவில்லை.
இவற்றின் பின்னணியில் சிறிலங்கா அரசு இயங்கியதற்கான திடமான, பல ஆதாரங்கள் உள்ளன.
இறுதிக்கப்பட்ட போரின் போது வடக்கு பகுதி முழுவதும் தனிமைப்படுத்தப்பட்டிருந்தது. எந்தவொரு உதவி நிறுவனமோ, ஊடகவியலாளர்களோ அப்பகுதிக்கு அனுமதிக்கப்படவில்லை.
இவ்வாறான புறச்சூழல்கள், ஐ.நாவினால் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதை கடினமாக்கும் காரணிகளாக உள்ளன.
இந்த வீடியோ ஆதாரங்கள் விசாரணைகளுக்கான கோரிக்கையை வலுப்படுத்துகின்றன.
தொடர்ந்து வாசிக்க..
Friday, August 28, 2009
இரு தினங்களின் முன் வெலிக்கடைச் சிறையில் தமிழ் அரசியற் கைதிகள் மரணம் ?
சிறிலங்கா தலைநகர், கொழும்பில் அமைந்துள்ள வெலிக்கடை மத்திய சிறையில், தடுத்து வைக்கப்பட்டிருந்த இரு தமிழ் அரசியற் கைதிகள் மரணமடைந்ததாக கொழும்புச் செய்திகள் தெரிவிக்கின்றன. இரண்டு நாட்களுக்கு முன் நிகழ்ந்ததாகத் தெரிய வரும் இந்த மரணங்களில் மர்மமும், சந்தேகமும் நிலவுவதாகத் தெரிவிக்கப்டுகிறது.
தொடர்ந்து வாசிக்க
வணங்காமண் பொருட்கள் துறைமுகத்திலிருந்து அகற்றப்ட 6.5 மில்லியன் ரூ தேவை!
கொழும்பு துறைமுகத்தில் கடந்த ஒன்றரை மாதங்களாக தேங்கிக் கிடக்கும் கொலராடோ கப்பலில் எடுத்துவரப்பட்ட நிவாரணப் பொருட்களை அங்கிருந்து வெளியகற்றுவதற்காக சகலவித அனுமதிகளையும் பெற்றுக் கொண்டுள்ள போதிலும், துறைமுக அதிகார சபைக்கு 6.5 மில்லியன் ரூபாவை செலுத்த வேண்டியுள்ளதால் நிரவாரண பொருட்களை விநியோகிப்பதில் மேலும் தாமதம் ஏற்பட்டுள்ளதாக இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் பிரதிப் பணிப்பாளர் நாயகம் சுரேன் பீரிஸ் தெரிவித்தார்.
இத்தொகையை அரசாங்கம் செலுத்துவதற்கு முன்வரும் என தாம் நம்புவதாக தெரிவித்த அவர், இன்றைய தினத்திற்குள் அதற்கான இணக்கம் அரசாங்கத்திடமிருந்து கிடைக்கும் பட்சத்தில் எதிர்வரும் திங்கட்கிழமை நிரவாரணப் பொருட்களை வவுனியாவுக்கு கொண்டு செல்லக் கூடியதாக இருக்கும் என்றும் குறிப்பிட்டார்.
தொடர்ந்து வாசிக்க...
Thursday, August 27, 2009
பிரபாகரன் மரணம் உண்மையா? இலங்கையில் இந்திய அதிகாரிகள் விசாரணை
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் குறித்த விசாரணைகளை மேற்கொள்வதற்காக, இந்திய அதிகாரிகள் குழுவொன்று விரைவில் இலங்கை வரவுள்ளதாகத் தெரிய வருகிறது. ராஜீவ் காந்தி படுகொலை குறித்து விசாரிக்கும் பல்துறை கண்காணிப்பு முகவர் அமைப்பு அதிகாரிகளே இவ்வாறு இலங்கைக்கு வருகை தரவுள்ளதாக புதுடில்லி செய்திகள் தெரிவிக்கின்றன
தொடர்ந்து வாசிக்க
பயில்வோம் பங்குச்சந்தை பாகம் 5
கடந்த வாரம் OPEN விலையின் விளக்கம் பற்றி பார்த்தோம், அதில் OPEN மற்றும் HIGH, மேலும் OPEN மற்றும் LOW ஆகிய இரண்டு நிலைகள் பற்றி சொல்லி இருந்தேன், இதில் OPEN மற்றும் HIGH என்ற நிலையை ஒரே புள்ளியாக கொண்டு ஒரு பங்கு தனது வர்த்தகத்தை தொடங்கி தொடர்ந்து கீழே வந்தால் அந்த குறிப்பிட்ட HIGH புள்ளியை கடக்க முடியாமல் தினறுவதாகவும், அந்த குறிப்பிட்ட புள்ளியில் முக்கியமான தடைகள் இருப்பதாகவும் எடுத்துக்கொள்ளவேண்டும்,
தொடர்ந்து வாசிக்க
அகதியான மக்களுக்கு அமைதியான நாடு கேட்க காங்கிரசில் இணையும் விஜய் ?
தமிழகத்தின் முன்னணி நடிகர் விஜய் காங்கிரஸ் கட்சியில் சேருவது ஏறக்குறைய உறுதியாகிவிட்டதாக தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன. காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பொதுச்செயலாளர் ராகுல் காந்தி, ஆகியோர் முன்னணியில் காங்கிரஸ் கட்சியில் விஜய் சேர்ந்து கொள்ளும் அறிவிப்பு விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தொடர்ந்து வாசிக்க
Tuesday, August 25, 2009
அதிர்ச்சி தரும் சிறிலங்கா இராணுவப் போர்க் குற்ற ஒளிப்பதிவு ஆவணம்.
'தமிழ் மக்களின் மனிதாபிமான மீட்பு நடவடிக்கைக்கான யுத்தம்' என சொல்லிக்கொண்டு, யுத்தத்தை முன்னெடுத்த சிறிலங்கா இராணுவத்தினரின், உண்மையான மனோநிலையை,அப்படியே பிரதிபலிக்கும், வீடியோ ஒளிப்பதிவு ஆவணம் எனும் விளித்தலோடு ஒரு வீடியோ ஒளிப்பதிவு வெளிவந்திருக்கிறது.
2009 ஜனவரி காலப்பகுதியில் இலங்கையில் எடுக்கப்பட்டதாகச் சொல்லப்படும், இந்த வீடியோப் பதிவினை, சிறிலங்காவின் ஜனநாயகத்திற்கான ஊடகவியலாளர்கள்' அமைப்பு வெளியிட்டிருக்கிறது.
தொடர்ந்து வாசிக்க
தமிழர்களின் மீதான அடுத்த தாக்குதல், இராணுவக் குடியேற்றங்கள் ?
இலங்கையில் தமிழமக்கள் மீதான மற்றுமொரு அழிப்புக்குத் தயாராகிறது இலங்கை அரசு எனச் சந்தேககள் தெரிவிக்கப்பட்டுள்ளன. இலங்கையில் இனப்பிரச்சனை தொடர்பாக எழுந்த ஆயுதப் போராட்டத்தை, பயங்கரவாதப் போராட்டமாகச் சித்தரித்து, அதனை ஒடுக்குவதாகக் கூறி, சர்வதேச நாடுகள் பலவற்றின் உதவியுடனும், ஈழத்தமிழமக்கள் மீதான இனவழிப்புத் தாக்குதலை நடத்திய இலங்கை அரசு, ஈழத்தமிழ்மககள் இலங்கைத் தீவின் தனித்துவமான ஒரு இனம் என்பதனையும், அதன் பூர்வீகத்தன்மையயையும், அழித்துவிடும் அடுத்தகட்டச் செயற்பாட்டுக்குத் தயாராகிவருவதாக, செய்திகள் கசியத் தொடங்கியுள்ளன.
தொடர்ந்து வாசிக்க
Friday, August 21, 2009
'நாடோடிகள்' சமுத்திரக்கனியின் அடுத்த திரைக்கதைக்கு சூர்யா or விஜய்?
சமுத்திரக்கனி, இயக்கத்தில் வெளிவந்த 'நாடோடிகள்' திரைப்படம், திரையரங்குகள் முழுவதும், சக்கை போடு போட்டு, ஹவுஸ்புல்லாக இன்னமும் ஓடிக்கொண்டிருக்கிறது. தற்பொழுது இத்திரைப்படத்தின், தெலுங்கு, கன்னட மொழிமாற்ற வேலைகள் ஓடிக்கொண்டிருக்கிறது. அம்மொழிகளிலும், 'நாடோடிகள்' திரைப்படம் ஹிட்டாகும் என்கிறார் சமுத்திரக்கனி.
'அடுத்து தமிழில் என்ன பண்ணப்போறீங்கன்னு' கேட்க, 'ரெடியா ஸ்கிரிப்ட் இருக்கு,' தமிழ்ழ முன்னணி ஹீரோக்களாக இருக்கும், சூர்யா, விஜய் ரெண்டு பேரையும் மீட் பண்ணி கதையை சொல்லப்போறேன் என கூறுகிறார்.
அதோட, கதைக்கு ஏத்த மாதிரி புரொடியூசரும் கிடைச்சா,' அடுத்ததொடர்ந்து வாசிக்க....
அவசர சிகிச்சை தேவைப்படும் நோயாளர்களை ஏ9 வீதியினூடாக அனுமதிக்க கோரிக்கை
அவசர சிகிச்சை தேவைப்படும் நோயாளர்களை கொழும்பிற்கு ஏ9 வீதியூடாகக் கொண்டு செல்வதற்கு அனுமதிக்குமாறு பாதுகாப்பு அமைச்சிடம் கோக்கை விடுக்கப்பட்டுள்ளது.
யாழ். போதனா வைத்தியசாலை நிர்வாகத்தினரால் யாழ். மாவட்ட அரசாங்க அதிபரூடாக இக்கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து வாசிக்க
Thursday, August 20, 2009
கே.பி யின் உதவியாளரும் கைது செய்யப்பட்டாரா..?
விடுதலைப்புலிகளின் சர்வதேச விவகாரங்களுக்கு பொறுப்பான கே.பி என்றழைக்கப்படும் குமரன் பத்மநாதன் சிறிலங்கா புலனாய்வுத்துறையால் கைது செய்யப்ட்டிருந்தமை தெரிந்ததே.இவரது கைது முதலில் ஒரு கடத்தல் சம்பவமாக இருந்தது எனவும், இது ஒரு ஒழுங்கற்ற முறைமை எனவும், பல்வேறு கருத்துக்கள் தெரிவிக்கபட்டிருந்தன. இந்நிலையில், பத்மநாதனின் உதவியாளர் ஒருவரையும், சிறிலங்காப் புலனாய்வுத்துறையாளர்கள் கைது செய்திருப்பதாக சிங்கள நாளிதழ்ச் செய்தியை ஆதாரங்காட்டி, கொழும்பச் செய்திகள் சில தெரிவிக்கின்றன
தொடர்ந்து வாசிக்க
வி.புலிகளை தலைமை தாங்கி நடத்த, இனி யாரும் இல்லை - கருணா
குமரன் பத்மநாதன் கைது செய்யப்பட்டதனை தொடர்ந்து, தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பு நிலைகுலைந்துள்ளதாகவும், அவர்களை தலைமை தாங்கி வழிநடத்தக்கூடிய ஆளுமை கொண்ட சிரேஷ்ட்ட உறுப்பினர்கள் எவரும், அவ் அமைப்பில் மிச்சமில்லை என அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து வாசிக்க
Wednesday, August 19, 2009
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந் , விடுதலைப்புலிகளிடம் பணம் பெற்றாரா?
தமிழகத்தின் பிரபல நட்சத்திரங்களில் ஒருவரான சூப்பர் ஸ்டார், விடுதலைப்புலிகளிடம் பணம் பெற்றிருப்பதாக, சிறிலங்காவின் அமைச்சர் ஒருவர் குறிப்பிட்டதாகக் கொழும்புச் செய்திகள் தெரிவிக்கின்றன.
தொடர்ந்து வாசிக்க
Monday, August 17, 2009
முகாம் மக்கள் அப்பாவிகள் அல்ல - வாரத்துக்கு 20 பேர் கைது - சரத் பொன்சேகா
கடந்த காலங்களில் இடம்பெற்ற மோதல்களின் போது இடம்பெயர்ந்து இடைத்தங்கல் முகாம்களில் தங்கியுள்ள மக்களின் மத்தியில் வாரத்திற்கொருமுறை புலிகள் இயக்க உறுப்பினர்கள் கைது செய்யப்படுவதாக பாதுகாப்புப் படைகளின் பிரதம அதிகாரி ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
இடைத்தங்கல் முகாம்களில் ஒவ்வொரு வாரமும் 15 முதல் 20 புலிப் பயங்கரவாதிகள் கைது செய்யப்படுகிறார்கள். எனவே அங்குள் மக்களை அப்பாவிகள் எனக் கூறி விட முடியாது.
தொடர்ந்து வாசிக்க
அழுத்தங்களுக்கு பயந்து முகாம் மக்களை விடுதலை செய்ய முடியாது - கோத்தபாய ராஜபக்ச
'உள்நாட்டு, வெளிநாட்டு அழுத்தங்களுக்காக, இடம்பெயர்ந்த மக்களை முகாம்களில் இருந்து விடுதலை செய்ய முடியாது' என திட்டவட்டமாக தெரிவித்திருக்கும் சிறிலங்காவின் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச, 'அவ்வாறு அவர்களை விடுதலை செய்தால் அகதிகளுடன் மறைந்திருக்கும், வி.புலிகளின் உறுப்பினர்களும், வெளியே வந்து வன்னியில் மறைத்து வைத்திருக்கும், ஆயுதங்களை பயன்படுத்தி தாக்குதலை தொடங்குவார்கள்' எனவும் கூறியுள்ளார்.
வன்னியில் பெரும் தொகையான ஆயுதங்களும், வெடி பொருட்களும், புதைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக வன்னியின் கிழக்கு பகுதியில் பெருமளவு ஆயுதங்கள் புதைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் முகாம் மக்களை விடுதலை செய்தால், அவர்கள் அவ் ஆயுதங்களை பயன்படுத்தி மீண்டும் தாக்குதலை தொடங்கிவிடுவதற்கான சாத்தியம் இருக்கிறது. அப்போது, அரசு பதவி துறக்க வேண்டும் என்ற கோரிக்கையை இதே எதிர்கட்சி குழுவினரே முன்வைப்பாரகள்' என இது தான் அவர்களது இறுதியான துருப்புச் சீட்டாக இருக்கும்' எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து வாசிக்க...
Saturday, August 15, 2009
தாய்வான் தைபூன் வெள்ளப்பெருக்கு இடிபாடுகளில் இன்னமும் 1300 பேர்
கடந்த வெள்ளிக்கிழமை சீனா மற்றும் தெற்குத் தாய்வான் பகுதிகளைத் தாக்கிய தைபூன் வெள்ளப்பெருக்கு இதுவரை 500 பேரைப் பலி வாங்கியிருப்பதுடன் இன்னமும் ஆயிரக்கணக்கான மக்களை இடிபாடுகளுக்குள் சிக்க வைத்துள்ளது. மேலும் இத் தைபூன் 1.5 பில்லியன் அமெரிக்க டாலர் கணக்கிற்கு பொருட் சேதத்தையும் விளைவித்துள்ளது.
மேலும் வாசிக்க...
Friday, August 14, 2009
Google தேடலில் குறுக்கு வழிகள்.
ஏதாவது ஒரு பாடல் திடீரென்று ஞாபகம் வருகிறது. உடனே Downlaod செய்து கேட்க தோன்றுகிறது. சாதரணமாக நீங்கள் Google இல் தேடினால் 7,8 பக்கங்களை காட்டி பின்னர் Downlaod லிங்க் இல்லாமல் ஏமாற்றமே கிடைக்கின்றது. விருப்பமான இனிமையான எந்த ஒரு பாடலையும் 2 கிளிக்கில் Download செய்ய முடிந்தால் Read More
ஆர்ச்சேட் - காந்தப்புலங்களை மின்சக்தியும் உருவாக்கும் என்பதை உலகுக்கு அறிவித்தவர்
கான்ஸ் கிருட்சியன் ஆர்ச்டேட் - Hans Christian Orested தான்சீனியாவை சேர்ந்த இயற்பியல் மற்றும் வேதியல் ஆய்வாளர்.மின்காந்தவியலின் முக்கிய பங்கான காந்தப்புலங்களை உருவாக்கும் தன்மை மின்சாரத்திற்கு உண்டு என்ற முக்கிய கண்டுபிடிப்பை கண்டுபிடித்தது இவர்தான். இவர் யாரென்றே தெரியாமல் எத்தனையோ பேர் இருக்க, கூகிள் நிறுவனம் இவரது பிறந்த தினத்தை தனது அடையாளச்சின்னத்தின் மூலம் கௌரவப்படுத்தி, 100 மில்லியன் மக்கள் இவருடைய பிறந்த நாளை கொண்டாட வைத்துள்ளது,
மின்காந்தவியல் பிறந்த வரலாறும், இவருடனேயே தொடங்குகிறது. எத்தனையோ விஞ்ஞான கண்டுபிடிப்புக்கள் நிகழ்ந்து கொண்டிருந்த 18 ஆம் நூற்றாண்டில் தான் ஆர்ச்டேட்டின் கண்டுபிடிப்பும் தற்செயலாக நிகழ்ந்தது. 1820 ஆம் அண்டு, இயற்கை தத்துவம் கற்பிக்கும் ஆசிரியராக, கொபென்கேஜன் பல்கலைக்கழகத்தில், பணியாற்றிக்கொண்டிருந்தார்.
தொடர்ந்து வாசிக்க...
Thursday, August 13, 2009
3,00,000 மக்களுக்காக 300 கிலோ மீற்றர்கள் நடக்கிறார்கள்
ஈழத் தமிழர்களின் இன்றைய பெருந்துயர், வவுனியாவில் உள்ள தடுப்பு முகாம்களில் பலவந்தமாகத் தடுத்துவைக்கப்பட்டுள்ள மூன்று லட்சம் மக்கள் குறித்ததே. இம் மக்களை முகாம்களிலிருந்து விடுவிக்கக் கோரியும், அவர்களின் அவலங்களை அனைத்துலக சமூகத்தின் கவனத்துக்குக் கொண்டுவரும் நோக்கத்துடனும் அவுஸ்திரேலியாவின் சிட்னியிலிருந்து, தலைநகர் கன்பராவை நோக்கி, இரு தமிழ் இளைஞர்க 300 கிலோ மீற்றர் நடைபயணத்தை மேற்கொண்டுள்ளனர்.
தொடர்ந்து வாசிக்க
ஓராண்டு நிறைவின் உள மகிழ்வோடு..
வணக்கம் உறவுகளே!
இப்போது போல்தான் இருக்கிறது. ஆனாலும் ஆண்டொன்று போயிருக்கிறது. ஆம்! 4தமிழ்மீடியா தனது சேவையை அதிகார பூர்வமாக ஆரம்பித்து ஓராண்டை நிறைவு செய்கிறது. நிறையவே பேசுவதற்கு உள்ள போதும், செயல்களின் வழியே உறவாட விரும்புகின்றோம். ஆதலால் இந்த வாரத்தில் தினமும், பல புதிய சிந்தனைகளோடு இந்தப் பகுதியில் உறவாட எண்ணியுள்ளோம். ஆதலால் தொடர்ந்து வாருங்கள் .. பயன்பெறுங்கள். ஆண்டின் நிறைவில் நின்று கடந்து வந்த பாதையை சற்றுத் திரும்பிப் பார்க்கின்றோம்
தொடர்ந்து வாசிக்க
யுத்தவலயத்தில், யுத்தத்தின் பின் 1322 புதைகுழிகள் எப்படி வந்தது? - புதிய செய்மதிப்படங்கள் ஆதாரம்
சிறிலங்காவின், முள்ளியவாய்க்கால் பிரதேசத்தில், கடந்த மே மாதம், இறுதிக்கட்ட தாக்குதல் நடைபெற்றுக்கொண்டிருந்த போது, பொதுமக்கள் குடியிருப்புக்கள் மீது எறிகணைத்தாக்குதல் நடத்தப்பட்டதனை உறுதிப்படுத்தும் பல செய்மதிப்படங்கள் வெளியிடப்பட்டிருந்தன.
யுத்தத்தினை முடிவுக்கு கொண்டு வந்த அரசு, அதன் பின்னர் அறிவிக்கபப்ட்ட பாதுகாப்பு வலயத்தில் எவ்வித ஊடகங்களையும், செல்ல இதுவரை அனுமதிக்கப்படவில்லை. இறுதிக்கட்ட தாக்குதல்கள் மிக உச்ச அளவில் இருந்த போது ஒரே நாளில் சுமார் 20,000 த்திற்கு மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என அச்சமும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
தொடர்ந்து வாசிக்க...
Wednesday, August 12, 2009
கே.பி. யின் கைது வரலாற்றுச் சிறப்புமிக்கது - ஜாதிக ஹெல உருமய தலைவர்
இலங்கை வரலாற்றில், அநுராதபுர காலத்துக்கு பின் கிடைத்த பெரு வெற்றி, கே.பியின் கைது எனப் பெருமிதம் கொள்கிறார் ஜாதிக ஹெல உருமயவின் தலைவர். விடுதலைப் புலிகளின் அனைத்துலகத் தொடர்பாளரான செல்வராஜா பத்மநாதனின் கைது குறித்துத் கருத்துத் தெரிவித்த ஜாதிக ஹெல உருமயவின் தலைவரான எல்லாவெல மேதானந்த தேரர்,
தொடர்ந்து வாசிக்க
இன்று வானில் தெரிகிறது எரிநட்சத்திரங்களின் மழை!
'எரி நட்சட்த்திரங்களின் மழை' - வானில் சுவர்க்கத்தினை கட்டியெழுப்ப, இன்றைய தினம், வானிலை மாற்றம் கொடுத்துள்ள அதிர்ஷ்டவசமான அனுமதி இது. ஆம், (ஆகஸ்ட் 11-12 ) இன்று நள்ளிரவு, பூகோளத்தின் வடதிசையில் உள்ள பெரும்பாலான நாடுகளில், வானில் காணக்கூடிய காட்சிதான் இந்த 'எரி நட்சத்திரங்களின் மழை'
அண்டவெளியில் உடைந்து போய் மிதந்து கொண்டிருக்கும் எரிநட்சத்திர துகள்களின் ஊடாக பூமியின் சுற்றுப்பாதை அமைகிறது.
எமது பூமி அந்த பாதையில் பயணிக்க போகிறது. எனவே தான் நமக்கு இதனை காணக்கூடிய அரிய வாய்ப்பு கிட்டியுள்ளது. இறுதியாக இவ்வாறு 1992 ஆம் ஆண்டு மிகப்பெரிய எரிநட்சத்திரங்களின் மழை வானில் தெரிந்தது. வால் வெள்ளியில் இருந்து விண்கற்கள் பொழியும் மழை எனவும் இதனை குறிப்பிடலாம்.
இன்று காட்சியளிக்க போகும் இவ் எரி நட்சத்திரங்களின் மழையில் உள்ள தூசி துகள்கள் சுமார் 1000 வருடங்கள் பழமை வாய்ந்தவை. அத்துடன் 1862 ஆம் ஆண்டு துகள்களாக்கப்பட்ட எரிநட்சத்திரங்களுடன் தொடர்புடையவகவும் இருக்கிறது.
தொடர்ந்து வாசிக்க...
பன்றிக் காச்சலுக்கு கேரளாவிலும் ஒருவர் பலி, பலியானோர் தொகை 14 ஆக உயர்வு
(2ம் இனைப்பு)பன்றிக்காச்சல் நோய் அபாயம் இந்தியாவில் தீவிரமுற்று வருவதாக் கருதப்படும் இவ்வேளையில், கேரள மாநிலத்திலும் இந்நோய் தாக்கத்தால் மரணமுற்றிருப்பதாகத் தெரிய வருகிறது. மகாராஷ்டடிரத்திலும், தொடர்ந்து தமிழகத்திலும், இந்நோயாளிகள் பலியாகியுள்ள நிலையில், கேரளாவில் பன்றிக் காய்ச்சலுக்கு முதல் நோயாளி பலியாகியுள்ளதாக அறியப்படுகிறது.
தொடர்ந்து வாசிக்க
ஈழத்தில் இனி ஆயுதப்போராட்டம் சாத்தியமா..?
முப்பது ஆண்டுகள் தொடர்ச்சியாக நடைபெற்று வந்த ஈழவிடுதலைப்போராட்டம், இலக்குகளை எட்டாத நிலையிலலேயே மெளனித்திருக்கிறது. இது மீண்டும் துளிர்க்குமா..? அது சாத்தியமாகுமா..? ஆயுதப்போராட்டமாகப் பரிணமிக்குமா..? அல்லது அகிம்சை வழியில் செல்லுமா..? என பதிலளிக்கப்படாத, தீர்க்கமாக எவராலும் பதிலளிக்கமுடியாத பல கேள்விகள் எழுந்து கொண்டேயிருக்கின்றன.
தொடர்ந்து வாசிக்க
Tuesday, August 11, 2009
கே.பி யை விசாரிக்க 'றோ' அதிகாரிகள் இலங்கை வருகின்றனர்.- கெஹலிய
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் சர்வதேசப் பொறுப்பாளரும், புதிய தலைவருமான குமரன் பத்மநாதனிடம் விசாரணை நடத்துவதற்காக இந்தியாவின் றோ புலனாய்வுப் பிரிவின் நான்கு அதிகாரிகள் அடுத்த வாரம் இலங்கை வரவுள்ளதாக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். இலங்கை பாதுகாப்புத் தரப்பினரால் கைது செய்யப்பட்டுள்ள கே.பி எனப்படும் குமரன் பத்மநாதனை விசாரிப்பதற்காக அமெரிக்கா உட்பட பல நாடுகளைச் சேர்ந்த உளவுப் பிரிவினர் இலங்கை அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்திருக்கிறார்கள். எனவே அவர்களது கோரிக்கைகளும் ஏற்றுக் கொள்ளப்பட்டு அவர்களுக்கும் சந்தர்ப்பங்கள் அளிக்கப்படுமென அவர் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து வாசிக்க
இனிக்கும் இலக்கியம் - பகுதி 1
இலக்கியத்தின் சுவையை இரசிக்கும் பக்குவம் குறைந்து வரும் காலமிது. இக்காலத்தைக் கருத்திற் கொண்டும், இளைய தலைமுறையைக் கவனத்திற் கொண்டும், இலக்கியத்தை இனிப்பாக, தரும் புது முயற்சி இனிக்கும் இலக்கியம். வாரந்தோறும் தேன்சுவையாக இசைகலந்து வருகிறது இந்த இனிக்கும் இலக்கியம்.
தொடர்ந்து வாசிக்க
பத்மநாதனின் கைதை உறுதிப்படுத்த தவறும் மலேசியா!
செல்வாராஜா பத்மநாதன் மலேசியாவில் வைத்து கைது செய்யப்பட்டதை உறுதிப்படுத்த மலேசிய பிரதம்ர் நஜீப் ரசாஸ் மறுத்துள்ளார். அண்மையில் மலேசிய தலைநகர் கோலாலம்பூரின் மஜிட்ஜமைக் எனுமிடத்தில் வைத்து, விடுதலைப்புலிகளின் சர்வதேச தொடர்பாளரான செல்வராஜா பத்மநாதன், புலனாய்வுப்பிரிவினரால் மர்மமான முறையில் கடத்தப்பட்டு, சிறிலங்காவுக்கு கொண்டு வரப்பட்டார்.
இந்நிலையில், தமிழீழ விடுதலைப்புலிகள், பத்மநாதன் மலேசியாவில் வைத்தே கடத்தப்பட்டுள்ளாராயின், இது பற்றிய அரச உத்தியோகபூர்வமான
தொடர்ந்து வாசிக்க...
Monday, August 10, 2009
மொரோகொட் சூராவளி அசுர பயணம் - தாய்வான், சீனாவை தொடர்ந்து சிக்கியது ஜப்பானும்!
தாய்வானில் இருந்து சீனாவினூடாக ஜப்பானையும் ஆக்ரமித்துள்ளது மொராகொட் சூறாவளி.குலை நடுங்க செய்து கொண்டிருக்கும் இச்சூறாவளியினால் இதுவரை சுமார் ஒரு மில்லியனுக்கு மேற்பட்ட சீனமக்கள், கிழக்கு மாகாணங்களில் இருந்து மேற்கு மாகாணங்களை நோக்கி நோக்கி இடம்பெயர்ந்துள்ளனர். கடந்த வெள்ளிக்கிழமை, தாய்வானில் உருவாகியது இச்சூராவளி.
அங்கு 50 வருடங்களின் பின்னர் ஏற்பட்ட மிகப்பாரிய சூராவளியாக உருவெடுத்தது இது. இதன் தாக்கத்தினால் அங்கு குறைந்தது 12 பேர் கொல்லப்பட்டும், 52 பேரும் காணாமல் போயும் உள்ளனர்.
தொடர்ந்து வாசிக்க...
தமிழகத்தில் 'ஸ்வைன் ப்ளு' பீதி - சென்னையில் சிறுவன் பலி
தமிழகத்திலும் பன்றிக் காச்சல் பீதி ஆரம்பமாகியுள்ளது. இந்தியாவில் பல் வேறிடங்களிலும் வெகு வேகமாகப் பரவத் தொடங்கியிருப்பதாக நம்பப்படும் பன்றிக்காச்சல் நோய் தீவிரத்திற்கு நேற்று மட்டும் நான்கு பேர் பலியாகியுள்ளார்கள்.இதே சமயம் இன்று மேலும் இருவர் பலியாகியுள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
தொடர்ந்து வாசிக்க
தமிழக மீனவர்களின் சடலங்கள் யாழ்ப்பாணத்தில் தகனம்
தமிழகத்தின் இராமேஸ்வரம் மற்றும் தனுஷ்கோடி ஆகிய பகுதிகளில் இருந்து மீன் பிடிக்கக் கடலுக்குச் சென்ற, கடற்தொழிலாளர்களின் படகுகள் கவிழ்ந்ததின் காரணமாகப் பலியானதாகக் கருதப்படும் ஏழு மீனவர்களின் சடலங்கள் யாழ் தீவகப் பகுதி கரைகளில் ஒதுங்கியிருந்தன. இந்தத் தொழிலாளர்களில் மற்றுமொருவரது சடலம், தமிழகத்தில் கரையொதுங்கியிருந்தது. யாழ் தீகவப் பகுதியில், கடந்த மாதம் 14ம் 15ம் திகதிகளில் கரையொதுங்கிய ஏழு சடலங்களின் இறுதிக் கிரியைகள் நேற்று யாழ் பண்ணை கோம்பயன்மணல் இந்து மயானத்தில் நடைபெற்று, தகனம் செய்யப்பட்டன.
தொடர்ந்து வாசிக்க
Sunday, August 9, 2009
செல்வராஜா பத்மநாதன் கடத்தலும் கைதும் கண்டனத்துக்குரியது - விடுதலைப்புலிகள்
தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களால் அனைத்துலக உறவுகளுக்கான செயலகத்தின் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டவரும், எமது விடுதலைப் போராட்டத்துக்கான அடுத்தகட்ட அரசியல் இராஜதந்திர நகர்வுகளுக்குப் பொறுப்பாக இருந்தவருமான திரு செல்வராசா பத்மநாதன் அவர்களை சிறிலங்கா அரசாங்கம் கடந்த 05.08.2009 அன்று மலேசியாவில் இருந்து பலவந்தமாகக் கடத்திச் சென்றுள்ளமையானது உலகத் தமிழ்மக்கள் அனைவரையும்; பேரதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது என விடுதலைப் புலிகளின் தலைமைச் செயலகத்திலிருந்து விடுக்கப்பட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கபட்டுள்ளது.
தொடர்ந்த வாசிக்க
Saturday, August 8, 2009
யாழ்ப்பாணத்தில் ஆளும் மஹிந்த அரசு வெற்றி - வவுனியாவை கைப்பற்றியது த.தே.கூ
நடைபெற்று முடிந்த வடக்கு, மற்றும் ஊவா உள்ளூராட்சி மன்ற தேர்தலில், 10602 வாக்குகளை பெற்று போனஸ் ஆசனங்கள் உட்பட 13 ஆசனங்களுடன், யாழ் மாநகர சபையினை ஆளும் (மகிந்த ராஜபக்ச) அரசு கைப்பற்றியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் தேசிய கூட்டமைப்பு 8802 வாக்குகளை பெற்று 8 ஆசனங்களை பெற்றுள்ளதுடன், சுபியான் தலைமையிலான சுயேட்சை குழுவினர் 1125 வாக்குகளை பெற்று 1 ஆசனத்தையும், ஆனந்த சங்கரி தலைமையிலான தமிழர் விடுதலை கூட்டணி 1007 வாக்குகளை பெற்று 1 ஆசனத்தையும் கைப்பற்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தொடர்ந்து வாசிக்க
13 வது சீர்திருத்தத்தை மீண்டும் அமுல்படுத்தக்கோரி, மன்மோகன் சிங்கிடம் கோரிக்கை
1987 ஆம் ஆண்டு இந்தியாவுக்கும், சிறிலங்காவிற்கும் இடையில் கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தத்திற்கு அமைவாக உருவாக்கப்பட்டுள்ள 13 வது சீர்திருத்த சட்ட மூலத்தை மீண்டும் அமுல்படுத்துமாறு, இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கிடம், இலங்கைத் தமிழ் கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன.
ஈழ தேசிய ஜனநாயக விடுதலை முன்னணியின் தலைவர்களான குணசேகரன், வசீகரன் ஆகியோர் இந்திய பிரதமரிடம் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளனர். மேலும்
Friday, August 7, 2009
தாய்ப்பாலின் மகத்துவத்திற்காய் - ஏஞ்சலினா ஜூலியுடன் இணைந்த வித்தியாசமான சிந்தனை
தொடர்ந்து வாசிக்க..
Thursday, August 6, 2009
ஒரு ஜேர்மனியத் திரைப்படம்
பாயும் வேங்கைப் புலியினை அடையாளமாகவும், மஞ்சள் நிறத்தினை வண்ணமாகவும், பார்டோ (Pardo) எனும் விருதுப் பெயரையும் கொண்டமைந்த லோகார்ணோ உலகத் திரைப்பட விழா நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. வருடம் தோறும் ஆகஸ்ட் மாதம் முதலிரு வாரங்களில் நடைபெறும் இந்தத் திரைத்திருவிழா 62ம் ஆண்டுக் கோலாகலம், இம்மாதம் 5ந் திகதி முதல், 15ந் திகதிவரை நடைபெறுகிறது.
தொடர்ந்து வாசிக்க
பாடசாலை Uniformகள், புனிதம் தரும் ஆடைகள்
ஆ...இதுதாங்க பொயின்ட். ஒன்றுதல் ஒன்றுபடுத்தல், ஒன்றாக படிக்க, ஒன்றாக விளையாட, ஒன்றாக சிரிக்க, ஒன்றாக பேச, நான் பெரிசு, நான் அழகு நீ அழகில்லை நான் வசதியானவன் நீ இல்லை போன்ற வேறுபாடில்லாது, சம உரிமைகளுடன், ஒன்றாக வாழனும் என்பதை சொல்லித் தருவது தான் பாடசாலையில் UNIFORM மின் உண்மையான அர்த்தம்.
தொடந்து வாசிக்க.... ('UNIFORM' என்ற தலைப்பில் Theme கொடுத்தால் எப்படி Photo எடுப்பீங்க?? - சில புகைப்படங்கள்..)
தஸ்லிமா நஸ்ரின் இந்தியா வந்தார்.
தஸ்லிமா நஸ்ரின் வங்கதேசத்தின் பிரபல பெண் எழுத்தாளர். 'லஜ்ஜா' எனும் புத்தகத்தில் இஸ்லாமிய மதக் கோட்பாடுகளை விமர்ச்சித்து எழுதியிருந்தமையால், முஸ்லிம் அமைப்புகளின் கோபத்திற்கு ஆளாகியிருந்தார். இதனால் இந்திய அரசின் உதவியில்இந்தியாவில் வசித்து வந்த இவர், கடந்த வருடத்தில், அரசியற்கட்சிகள் இந்திய அரசுக்குக் கொடுத்த அழுத்தத்தை தொடர்ந்து, இந்தியாவில் இருந்து பாதுகாப்பாக வெளியேறி சுவீடன் நாட்டிற்குச் சென்றிருந்தார்.
தொடர்ந்து வாசிக்க
'வணங்காமண்' நிவாரணத்தில் இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கம் இழுத்தடிப்பு?
அய்ரோப்பிய தமிழர்களால் இலங்கைத் தமிழர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்ட 840 டன் உணவுப் பொருள்களை ஏற்றிச் சென்ற நிவாரணக் கப்பலின் சரக்கு குறித்த ஆவணங்களை இலங்கை செஞ்சிலுவை சங்கத்திற்கு முன்னரே அனுப்பி வைத்து விட்டதாக அக்கப்பலுக்கான சென்னை முகவர் தெரிவித்துள்ளார். அய்ரோப்பிய தமிழர்களால் 840 டன் உணவுப் பொருள்கள் ஈழத் தமிழர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
தொடர்ந்த வாசிக்க
கனடா, ஐரொப்பிய நாடுகள் தாராள நிதியுதவியில்லை - மஹிந்த சமரசிங்க
இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ள வெளிநாட்டு உதவிகள் பயங்கரவாதத்தின் பிடியிலிருந்து மீட்கப்பட்டுள்ள பிரதேசங்களின் புனர்நிர்மாணங்களுக்கு போதியனவாக இல்லையென இடர் முகாமைத்துவ அமைச்சர் மகிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
இலங்கை அரசாங்கம் பயங்கரவாதத்தைத் தோற்கடித்த பின்னர் பாரிய அபிவிருத்தித் திட்டங்களை மீட்கப்பட்ட பிரதேசங்களில் மேற்கொண்டு வருகின்றது. இந்நிலையில் இந்தப் பணிகளுக்கு வெளிநாட்டு உதவிகள் மிகவும் முக்கியமானதொன்றாகும். எனவே இதுவரையும் மனிதாபிமான விடயங்கள் குறித்துப் பேசி வந்த சர்வதேச நாடுகள் எமது அபிவிருத்தித் திட்டங்களுக்கு உதவிகளை வழங்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து வாசிக்க..