இலங்கையில் ஆடைகள் தயாரித்து அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்து விற்கும், முதன்மை ஆடை நிறுவனங்களான விக்டோரியா சீக்ரெட் (Victoria's Secret) மற்றும் Gap ஆகியவற்றின் தயாரிப்புக்களை புறக்கணிக்க கோரி, அமெரிக்க வாழ் தமிழ் மக்களினால் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று நடத்தப்பட்டுள்ளது.
அமெரிக்க தமிழ் அரசியல் செயல் அவையின், 'இலங்கை தயாரிப்புக்கள் புறக்கணிப்பு போராட்ட குழு' இப்போராட்டங்களை ஒழுங்கமைத்து நடத்தியுள்ளது.
அமெரிக்காவின் முக்கிய நகரங்களான வாஷிங்டன் டிசி, நியூயோர்க், அட்லாண்டா, மியாமி, சான்பிரான்ஸிஸ்கோ, டல்லாஸ், பிரின்ஸ்டன், நியூஜெர்ஸி, சிகாகோ, ரேலி, சார்ல்ஸ்டன், கொலம்பஸ், ஒஹியா மற்றும் பொஸ்டனில் உள்ள இந்நிறுவனங்களின் வர்த்தக் நிலையங்களுக்கு முன்பாக இலங்கைதொடர்ந்து வாசிக்க...