ஜனாதிபதியின் உத்தரவின் பேரில் இசுரு பாலபட்டபந்தி நெதர்லாந்தின் இலங்கைத் தூதரகத்தின் இரண்டாம் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். பிரதம நீதியரசர் அசோக டி சில்வாவை மாத்திரமல்லாது நீதியரசர் ஜகத் பாலபட்டபந்தி ஆகிய இருவரையுமே மகிழ்ச்சிக்குள்ளாக்கும் வகையில் ஜனாதிபதி இந்த நடவடிக்கையை எடுத்திருப்பதாக நீதியமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.உயர் நீதிமன்ற நீதியரசர் ஜகத் பாலபட்டபந்தியின் மகனான இசுரு பாலபட்டபெந்தி, பிரதம நீதியரசர் அசோக டி சில்வாவின் மகளையே மணம்முடித்துள்ளார். அசோக டி சில்வாவின் மகள் தற்போது நெதர்லாந்தில் உயர் கல்வி பயின்று வருவதனால் அவரது கணவரான இசுரு பாலபட்டபெந்தியை நெதர்லாந்திற்கு அனுப்ப ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார்.
இதனடிப்படையில், நெதர்லாந்தில் கல்விபயின்றுவரும் நீதியரசின் மகளுக்கு, தனது கணவரான இசுரு பாலபட்டபெந்தியுடன் இலங்கை அரசாங்கத்தின் செலவில் வாழக்கூடிய அதிர்ஸ்டம் ஏற்பட்டுள்ளது.
இவர்கள் இருவரும் வசிப்பதற்கு இலங்கை அரசாங்கத்தின் செலவில் நெதர்லாந்தில் சொகுசு வீடொன்றைப் பெற்றுக்கொடுக்கவும் வெளி
தொடர்ந்து வாசிக்க...


தமிழக அரசு சிறந்த நடிகர்களாக ரஜியும், கமலையும் தேர்வு செய்துள்ளது. அதே போன்று சிறந்த நடிகையாக ஜோதிகாவையும், சினேகாவையும் தேர்வு செய்துள்ளது. 2007, 2008 -ம் ஆண்டுகளுக்கான தமிழ்நாடு அரசு, திரைப்பட விருதுகளுக்கான பரிந்துரைகளை வழங்க நீதிபதி ஏ.கே. இராஜன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது.
மலேசியாவில் 'மக்கள் சக்தி மலேசியா' எனும் புதிய கட்சி, இந்திய வம்சாவளியினரால் இன்று தொடங்கப்படுகிறது. இதனை ஆளும் கட்சியினதும், தலைவரும், மலேசியாவின் பிரதமருமான நஜிப் ரசாக் தொடங்கி வைத்தார்.
இனிக்கும் இலக்கியம் ஒலிப்பத்தியில், இனிப்பாக இவ்வாரம் வரும் இலக்கியம் , ஒரு குறுந்தொகைப்பாடல். இணைந்து வருகிறது அதையொட்டிய ஒரு திரையிசைப் பாடல். 
ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜீ.எஸ்.பீ.பிளஸ் வரிச்சலுகை சிறிலங்காவுக்கு கிடைக்கப்பெறுமா என்பதில் தொடர்ந்தும் இழுபறி நிலைமை காணப்படுகிறது.
விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் உயிரோடு உள்ளார் என பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறினார்.பாலாற்றை காக்க நடைபெற்ற மும்முனை போராட்டத்தில் பா.ம.க.நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கலந்து கொண்டார் . அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது
தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி தலைமையில், ஒன்பதாவது உலகத்தமிழ் மாநாடு வருகிற 2010 ஜனவரி மாதம் நடைபெறுவதற்கு, அ.தி.மு.க பொதுச்செயலாளர் ஜெயலலிதா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
நடிகர் பிரபுதேவாவின், மனைவி ரம்லத்தின் பிரச்சினை தமிழகத்தில் உள்ள மாதர் சங்கங்களின் பிரச்சினையாக மாறிவிட்டது.அவருக்கு பக்கத்துணையாக இருக்க எல்லா மகளீர் அமைப்புக்களும் முடிவு செய்துள்ளன.
ஐ.நாவின் 64 வது பொதுக்கூட்டம் நியுயோர்க்கில் ஆரம்பமாகி,நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இதன் போது, அணு ஆயுத பரவல் தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என அனைத்து நாடுகளுக்கும் இடையே ஒரு இணக்கப்பாடு எட்டப்பட்டு, அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் படி கோரப்பட்டது. இதற்கும் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இது ஐ.நாவின் பொதுக்கூட்டத்தில் எட்டப்பட்டுள்ள ஒரு முக்கிய விடயமாகும். எனினும், இத்தீர்மானத்திற்கு கையெழுத்திட இந்தியா மட்டும்
கடந்த சில காலமாக நடிகை சினேகா பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வருகின்றார். சர்ச்சைகள் ஓய்தாலும் நடிகை சினேகா ஓயமாட்டார் போல. திருச்சி சின்னகடை வீதியில் பிரபல நகை கடை ஒன்று உள்ளது. இதன் 2-ம் ஆண்டு தொடக்க விழா நடைபெற்றது. இதில் புன்னகை புகழ் நடிகை சினேகா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொள்வார் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.
இரண்டு மண்டலங்களாக பிரிக்கும் பணி விரைவில் துவங்கும் என தமிழக துணை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.சென்னை மாநகராட்சி மூலம் கட்டப்பட்டு வரும் மேம் பாலப் பணியினை துணை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பணிகளை ஆய்வு செய்தார்.
உலக புகழ் பெற்ற ஆங்கில நடிகை ஜுலியா ராபர்ட்ஸ் அரியானா மாநிலம் பட்டோடியில் உள்ள ஹரி மந்திர் ஆசிரமத்தில் நடைபெறும் ஆங்கில படப்பிடிப்புக்காக வந்துள்ளார். அவருடைய 3 குழந்தைகளும் உடன் வந்துள்ளனர். ஆசிரமத்தின் அருகே நட்சத்திர ஓட்டலில் தங்கி இருக்கும் ஜுலியா, ஹரி மந்திர் ஆசிரமத்தின் தலைவரான சுவாமி தரம் தேவை சந்தித்து ஆசி பெற்றார். அப்போது ஜுலியாவின் 3 குழந்தைகளுக்கும் ஏற்கனவே உள்ள ஆங்கில பெயர்களுக்கு பதிலாக இந்து கடவுள்களின் பெயரை சுவாமி தரம்தேவ் சூட்டினார்.
வவுனியா தடுப்பு முகாமிலிருந்து விடுதலையாகி லண்டன் சென்ற தமிழ்வாணி ஞானகுமார் லண்டன் கார்டியன் பத்திரிகைக்கு நேர்காணல் வழங்கியிருந்தார். இதன்மூலம் இந்த உண்மைத் தகவல்கள் சர்வதேச ஊடகங்களில் வெளியாகியதால் இலங்கை அரசாங்கம் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கியிருந்தது. இந்நிலை தொடர்வதைத் தடுக்கும் நோக்கில் தமிழ்வாணி ஞானகுமாருக்கு தங்குமிட வசதிகளை வழங்கிய வீட்டார் அனைவரையும் பாதுகாப்புத் தரப்பினர் கைது செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.


கனடா ரொறன்ரோ நகரில் நாடுகடந்த தமிழீழம் தொடர்பான ஆய்வு கூட்டம் ஒன்று கனடா கந்தசுவாமி கோயில் ஆலய மண்டபத்தில் நேற்றுமாலை இடம்பெற்றது. இக் கூட்டம் விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்துசமுத்திரத்தில் கேந்திர நிலையங்களில் அமைந்துள்ள துறைமுகங்களில் ஒன்றான காங்கேசன் துறைமுகத்தை புதுப்பித்து அமைக்கும் பொறுப்பை இந்தியாவிடம் கையளிக்க இலங்கை அரசாங்கம் முடிவுசெய்துள்ளது. அதன் தொடக்கமாக துறைமுகம் எவ்வாறு புனருத்தாரணம் செய்யப்பட வேண்டும் என இலங்கை விரும்புகிறது, எதிர்பார்க்கிறது என்பது குறித்த நீண்ட அறிக்கையை இலங்கை துறைமுகங்கள் அபிவிருத்தி அதிகாரசபை திட்ட வரைவு ஒன்றை, விரிவான அறிக்கை ஒன்றை இந்தியாவிடம் சமர்ப்பித்துள்ளது.
மண்டபம் பகுதி மீனவர்களிடம், ஆடைகளைக் களையச் சொல்லி, அவமானப்படுத்தியதோடு அவர்கள் பிடித்து வைத்திருந்த இறால்களையும் கடற்படையினர் பறித்துச் சென்றுள்ளனர் என மீனவர்கள் முறைப்பாடு தெவித்துள்ளனர். முறைப்பாட்டில் அவர்கள் மேலும் தெவித்திருப்பதாவது

தென்மாவட்ட மக்களின் வாழ்வாதாரம் பெருக தென்தமிழகம் பிரிய வேண்டியது காலத்தின் கட்டாயம் என்று அகில இந்திய மூவேந்தர் முன்னணிக் கழக நிறுவனர் டாக்டர் சேதுராமன் அறிவித்துள்ளார்.
பழ.நெடுமாறன் உண்மைக்கு புறம்பான தகவல்களை தொடர்ந்து தெரிவித்துவருவதாகவும், தனக்கு முடிவு கட்ட முற்படுவதாகவும் தமிழக முதல்வர் கருணாநிதி குற்றம் சாட்டியிருக்கிறார்.ஈழத்தமிழர் பிரச்சினையில் முதலமைச்சர் கருணாநிதியின் செயற்பாடுகள் உலகத்தமிழர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியிருப்பதாக, அண்மையில் பழ.நெடுமாறன் தெரிவித்திருந்தார்.

சிறீலங்காவுக்கான அதிகார பூர்வ விஜயம் ஒன்றினை மேற்கொண்டு, ஐ.நாவின் அரசியல் விவகாரங்களுக்கான செயலாளர் நாயகம் லைன் பாஸ்கோ, நேற்று கொழும்பை வந்தடைந்தார். இடம்பெயர்ந்த மக்களின் நிலைமை தொடர்பாக நேரடியாக கண்டறியவும், அங்கு மேற்கொளப்பட்டு வரும் அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பாக, நேரடியாக கண்டறியவும் இன்று வடக்கு கிழக்கு பகுதிகளுக்கு செல்லும் அவர், நாளை வெள்ளிக்கிழமை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவினையும் சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.
மஹிந்த சிந்தனை, சிறிலங்காவினை கடன் பெறுவதில் உலகில் கின்னஸ் சாதனைக்கு கொண்டு செல்லப்போகிறதென, ஐ.தே.கவின் நாடாளுமன்ற உறுப்பினர் கபீர் ஹசீம் தெரிவித்துள்ளார்.ஒரு கிலோ பால் பக்கெட்டுக்கு 125 ரூபா வரி, ஒரு லீற்றர் பெற்றோலுக்கு 75 ரூ வரி, ஒரு கிலோ நெத்தலி கருவாட்டிற்கு 30 ரூ வரி, ஒரு டின் மீன் ஒன்றிற்கு 80 ரூ வரி, ஒரு கிலோ கடலைக்கு 30 ரூ வரி, என எல்லாவற்றிற்கும் சிறிலங்கா அரசு வரி அறவிடுகிறது. இவற்றையெல்லாம் என்ன செய்கிறது?

ஆஷ்கார் விருதுகளை அள்ளிக்குவித்த 'ஸ்லம் டோக் மில்லியனர்' திரைப்படத்தின் இயக்குனர் 'டேனி பொயல்', தனது அடுத்த திரைப்படத்திற்காக அமீர் கான், மற்றும் ஷாருக்கானுடன் இணைந்துள்ளார் என தெரியவருகிறது.
தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியைத் , திமுக தனித்து நின்று தோற்கடித்து அதிர்ச்சி தரக் காரணமானவர் அண்ணா என நிதியமைச்சர் பிராணப் முகர்ஜி குறிப்பிட்டார். சென்னையில் நடந்த அறிஞர் அண்ணா நூற்றாண்டு நிறைவு விழாவில், கலந்த கொண்டு பேசுகையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
சிறிலங்கா இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்கள் தொடர்பான வீடியோவினை அண்மையில் சேனல் 4 ஊடகம் வெளியிட்டு பெரும் அழுத்தத்தினை அரசிற்கு கொடுத்திருந்தது. இதன் பின்னர் நேற்று முன் தினம் ஐ.நாவின் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டார் சிறிலங்காவின் மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க. இதன் போது, பலரும் எதிர்பார்த்தது போன்றே, சேனல் 4 தொலைக்காட்சியில் ஒளிபரப்பட்ட வீடியோ தொடர்பாக விசேட உரை ஆற்றியுள்ளார் அவர்.
புலிகளின் தோல்வியைத் தாங்கிக்கொள்ள முடியாமல் அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட சர்வதேச நாடுகள் மீண்டும் இலங்கைக்கு எதிராக சதிவலையினை விரித்துள்ளன. இதற்கு உள்நாட்டு பிரதான அரசியல் கட்சிகள் சிலவும் உடந்தையாக உள்ளனவென தேசிய சுதந்திர முன்னணி குறிப்பிட்டுள்ளது. சனல் 4 வீடியோ காட்சியின் ஊடாக ஏற்படுத்தப்பட்ட சதியினை விட, இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவராக வரவிருக்கும் பற்றீசியா புரூட்டீனால் ஏற்படப் போகும் ஆபத்துக்கள் பாரியளவாக இருக்கும்.


நடிகர் விஜர் அரசியல் பிரவேசம் குறித்து, சென்னை ஊடகவியலாளர் சந்திப்பில் இன்று மனம் திறந்துள்ளார்.கடந்த சில தினக்களாகவே எந்த பத்திரிகையை திறந்தாலும் எனது அரசியல் பிரவேசம் பற்றிய செய்தி தான் முதலில் நிற்கிறது. உண்மையை சொன்னால் நான் அந்தளவுக்கு பெரிய ஆள் கிடையாது.சினிமா தன எனக்கு முக்கியம். அரசியல் பிரவேசம் குறித்து முடிவேதும் எடுக்கவில்லை.

சென்னையில் பத்திரிகையாளர்கள் இணைந்து, இலங்கை ஊடகவியலாளருக்கு ஆதரவாகக் கண்டனக் கூட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர். ஊடகவியலாளர் திசநாயகத்திற்கு வழங்கப்ட்டுள்ள தண்டனையைக் கண்டித்தே இக் கண்டனக் கூட்டம் நடைபெற்றது. பயங்கரவாத தடுப்புச் சட்டம் மற்றும் அவசரகால சட்டத்தின் கீழ், சிறிலங்கா நீதிமன்றம் பத்திரிகையாளர் திசாநாயகத்திற்கு 20 ஆண்டுகால சிறைத்தண்டனை வழங்கியது. 
ஜேர்மனியில் எயிட்ஸ் நோயினை பற்றிய விழிப்புணர்வினை மக்களிடையே கொண்டு வரும் நோக்கில், ஒரு எயிட்ஸ் விழிப்புணர்வு முகவர் நிலையம், முன்னாள் ஜேர்மனிய சர்வாதிகாரி அடோல்ப் ஹிட்லர் ஒரு இளம்பெண்ணுடன் பாலியல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதனை சித்தரிக்கும் முகமாக தயாரித்த விளம்பரம் ஒன்று கடந்த புதன்கிழமை இணையதளம் வழியே யூடியூப்பில் ஏற்றப்பட்டு, ஐரோப்பிய மக்களின் பரவலான எதிர்பை சம்பாதித்துக்கொண்டது.